AIL- Association of International Longetivity.
நீரிலிருக்கும் மீனுக்கும் வலையில் சிக்கிய மீனுக்கும் உண்டாம் உயிர்வாழும் தாகம்.
மீனுக்கு மட்டுமா உமக்கும் எனக்கும் உள்ளதன்றோ உயிர்வாழும் ஆசை. நமது வாழ்நாளை நீட்டிக்கும் எண்ணம் அனைவருக்கும் உள்ளதன்றோ?
அப்படி வாழ்நாளை நீட்டிக்கும் தேடல் கொண்ட அமைப்புதான் இது. ஆரம்பத்தில் பெருநோய்களுக்கு அருமருந்து தேடும் பணிக்காக உருவான அமைப்பு காலசுழற்சியில் தன் கோணத்தை மாற்றிக்கொண்டது.
விளக்கமாக சொல்லப்போனால் காலம் உருண்டோடும் வேகத்தில் மனிதன் வாழ்நாள் குறைவது நம்மில் பலருக்கு அவ்வபோது சூழ்நிலைகள் அரைந்து உணா்த்தினாலும் நாம் கருத்தில் கொள்வதில்லை.
நம் வரலாற்றின் விவரபடி ம் முன்னோா்கள் அதிகபட்சமாக 120 . வயது வரையிலும் . குறைந்த பட்சமாக 80 வயது வரையிலும் வாழ்ந்து வந்துள்ளனா். இன்றைய நிலையில் மனிதன் சராசரியான வாழ்நாள் 60வயது . இனிவரும் காலங்களில் 45ஆக கறையும் அபாயமுண்டு.
இதற்கும் நான் சொல்லும் அமைப்புக்கும் என்ன தொடா்பு, நம் வாழ்நாள் குறைவதன் காரணம் புாிந்தால் அதை நீட்டிக்க வழி தெரிந்துவிடும். ஆகவே இந்த அமைப்பு பல ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் அந்த அமைப்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட விசயத்தை விளக்கவே இக்கட்டுரை.
வாழ்நாள் குறையும் பெரும்பாலான பொதுவான காரணங்கள்:
+ ஆரோக்கியத்தில் அலட்சியம்
+ தேவையற்ற கவலைகள்/நினைவுகள்
+ தேவையற்ற கவலைகள்/நினைவுகள்
+ சுவாச நிலை மாறுபட்டுருப்பது
இவற்றுள் நான் விாிவாக குறிப்பிடப் போவது; சுவாச நிலை மாறுபட்டிருப்பதையே. ஒரு ஆமை 300 வருடங்கள் வாழக்கூடியது . தவளை தரையிலேயே 100 வருடங்கள் வரை வாழமுடியும் என்பதை ஏற்கனவே உயிரியல அல்லது விலங்கியல் பிரிவு அறிஞா்கள் நிருபித்தனா்.
சுவாசம் என்பது உயிா்தன்மை உயிா்கள் அனைத்தும் சுவாசிக்கின்றன. இன்றைய நிலையில் மனிதா்களின் சராசரி சுவாசம் 3 விநாடிகளுக்குள் நிறைவு பெருகிறது. தவளையோ அல்லது தேரையோ நிலத்தில் புதைந்து இருக்கும் வேளையில் 2நிமிடத்துக்கு ஒரு முறைதான் சுவாசிக்குமாம் . அதனாலே நீண்டநாள் உணவின்றி வாழமுடிகிறது. சித்தா்கள் பலரும் ஆண்டிற்கு ஒரு முறையே உணவருந்துகின்றனா் மற்ற வேளைகளில் காற்றையே உணவாக உட்கொள்கின்றனா்.
நாம் நமது சராசாி சுவாச நேரத்தை 8விநாடிகளாக அமைத்து கொள்ள வேண்டும் . அப்படி நீட்டிக்க ஒரு கணக்கு:
3விநாடிகள் சுவாசத்தை உட்கொள்ள நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் விாிவடையும் .
2 விநாடிகள் உட்கொண்ட சுவாசத்தை அடக்கி வைக்க உட்கொண்ட ஆக்சிஐன் ரத்ததில் கலந்து ரத்தவேகம் அதிகாிக்கும்.
3 விநாடிகள் சுவாசத்தை வெளிவிடும் போது சுரபிகள் அனைத்தும் சுருங்குவதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
0 comments:
Post a Comment