Showing posts with label எனக்கு பிடித்த சில பிரபலம். Show all posts
Showing posts with label எனக்கு பிடித்த சில பிரபலம். Show all posts

களத்தூர் கண்ணம்மாவில்
கையெடுத்துக் கும்பிட்ட
சிறுவனை இன்று இந்திய
சினிமா வணங்குகிறது.
விஸ்வரூபமாய் தொடரும்
தலைமுறைகளை வென்ற
தனி அவதாரம் கமல்.
முதல்
படத்திலேயே (களத்தூர்
கண்ணம்மா) சிறந்த
குழந்தை நட்சத்திரத்துக்கான
தேசிய விருதைப்
பெற்றவர் கமல்!
'களத்தூர் கண்ணம்மா',
'ஆனந்த ஜோதி', 'பார்த்தால்
பசி தீரும்',
'பாதகாணிக்கை',
'வானம்பாடி' என 5
படங்களில் நடித்த
பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம்
சேர்ந்தார் கமல். அவர்
வேறு திசைக்குப்
பயணப்பட்டது அதற்குப்
பிறகுதான்!
களத்தூர் கண்ணம்மாவில்
குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானாலும்கூட,
தனது குழந்தைப்
பருவத்து நடிப்பில்,பெரிய
நடிகர்கள் யாருக்கும்
மாஸ்டர் கேரக்டரில் கமல்
நடித்ததே இல்லை!
கமல் நடித்த படங்களைப்
பாராட்டி பாலசந்தர்
எழுதும்போது 'மை டியர்
ராஸ்கல்' என்றுதான்
அழைப்பார்!
கமலின் தந்தை உடல்
தகனத்துக்காக மயானத்தில்
வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன்,
சந்திரஹாசன், கமல்
மூவரும் சிதையின்
அருகில் நிற்க, திரும்பிப்
பார்த்த கமல் 'அண்ணா,
நீங்களும் வாங்க' என
இருவரை அழைத்தார்.
அவர்கள் ஆர்.சி.சக்தி,
ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா.
கதறித்
துடித்தபடி அவர்களும்
கொள்ளிவைத்தனர்!
ஃபிலிம்ஃபேர்
விருதை 18
முறைக்கு மேல் வாங்கிய
ஒரே இந்திய நடிகர்
கமல்தான்!
எண்பதுகளின் மத்தியில்
'மய்யம்' என்ற இலக்கியப்
பத்திரிகையைக் கொஞ்ச
காலம் நடத்தினார் கமல்!
எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன்
பிறந்தேன்',
சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை'
படங்களில் டான்ஸ்
மாஸ்டராகப்
பணியாற்றி இருக்கிறார்
கமல்!
ஆரம்பத்தில் 'சிவாலயா'
என்ற நடனக்
குழுவை ஆரம்பித்து நடத்தினார்
கமல்.அதற்குப் பிறகுதான்
நடன உதவியாளராக
தங்கப்பனிடம் சேர்ந்தார்!
ஆர்.சி.சக்தியின்
இயக்கத்தில் வந்த
'உணர்ச்சிகள்'தான்
கமலைத்
தனிகதாநாயகனாக
ஆக்கியது. ஆனால்,
முந்திக்கொண்டு வெளிவந்த
படம்'பட்டாம்பூச்சி'!
'நினைத்தாலே இனிக்கும்'
படம்தான் கமலும்
ரஜினியும் சேர்ந்து நடித்த
கடைசிப் படம்!
கமல் ரொம்பவும்
ஆசைப்பட்டு,
முற்றுப்பெறாத கனவுகளில்
ஒன்று...'மருதநாயகம்'!
கடவுள்
மறுப்புக்கொள்கையைக்
கொண்டவர் என்றாலும்,
ஆத்திகத்தை கமல்விமர்சனம்
செய்வதில்லை!
தமிழ், மலையாளம்,
தெலுங்கு, கன்னடம்,
ஹிந்தி,பெங்காலி மொழிப்
படங்களில் நடித்திருக்கிற
ஒரே தமிழ் நடிகர்
கமல்தான்!
தன் உடலைத் தானம்
செய்திருக்கிறார் கமல்.
சினிமாவில் இத்தகைய
முன் மாதிரி இவர்தான்!
கமலுடன் அதிக
படங்களில் ஜோடியாக
நடித்தவர்கள் இரண்டு பேர்.
ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!
கமல், சாருஹாசன்,
சுஹாசினி என
அவரது குடும்பத்தில்
இருந்தே மூன்று பேர்
தேசிய
விருது பெற்றிருக்கிறார்கள்!
'ராஜபார்வை' முதல்
தம்பியுடன்
இருந்து அலுவலகத்தைக்
கவனிக்கிறார் அண்ணன்
சந்திரஹாசன்.
கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான்
இருக்கிறது!
ஏதோ மன வருத்தம்...
சாருஹாசனும் கமலும்
இப்போதும்
பேசிக்கொள்வதுஇல்லை!
பிரசாத் ஸ்டுடியோவில்
அகேலா கிரேன்
இறக்குமதி ஆகியிருந்தது.
அதை இரவோடு இரவாகச்
சென்று பார்த்த முதல் நபர்
கமல். பிறகுதான்
பி.சி.ஸ்ரீராம்
போன்றவர்கள்
வந்து பார்த்தார்கள்.
தொழில்நுட்பத்தின்
மீதுகொண்ட தீராத
ஆர்வம்தான் காரணம்!
வீட்டில் நிறைய
நாய்களை வளர்க்கிறார்.
கொஞ்ச
காலத்துக்கு முன்பு இறந்துபோன
நாய்க்காகக் கண்ணீர்விட்ட
தருணங்களும் உண்டு!
' ஹே ராம்' படம் முதல்
டைரக்ஷனாக
வெளிவந்தாலும்,
முன்னமே 'சங்கர்லால்'படத்தை,
டி.என்.பாலு இறந்து போக,
முக்கால்வாசிக்கு மேல்
இயக்கியிருக்கிறார்!
கமல் மிகவும்
ஆத்மார்த்தமாக நேசித்த
மனிதர் மறைந்த அனந்து.
தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த
நண்பர் என்ற அன்பு அவர்
நெஞ்சு நிறைய உண்டு!
அதிஅற்புதமான உலக
சினிமாக்களின் டி.வி.டி.
அணிவகுப்பு கமலின்
ஹோம் தியேட்டர்
கலெக்ஷனில் இருக்கிறது!
பட்டு வேட்டி பிடிக்கும்.
தழையத் தழையக்
கட்டிக்கொண்டு ஆபீஸ்
வந்தால், அன்று முழுக்க
உற்சாக மூடில் இருப்பார்!
தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, ஹிந்தி,
மலையாளம்,
பெங்காலி,கன்னடம்,
பிரெஞ்சு என
எட்டு மொழிகள் கைவந்த
வித்தகர்!
ரஜினிக்குப் பிடித்த
படமான 'முள்ளும் மலரும்'
படம் வெளியாவதற்குக்
காரணமாக
இருந்தவரே கமல்தான்!
'உங்களது படங்களில்
உங்களுக்கு மிகவும்
பிடித்த படம் எது?'
என்று கேட்டால், 'நான்
நடிக்கப் போகும்
எனது அடுத்த படம்' என்பார்.
கமல் மெட்ராஸ்
பாஷை பேசிய 'சட்டம் என்
கையில்', 'அபூர்வ
சகோதரர்கள்'ஆகிய
படங்கள் மெகா ஹிட்.
மெட்ராஸ்
பாஷைக்கு கமலின்
குரு லூஸ் மோகன்!
'சட்டம் என் கையில்'
படம்தான் கமல்
இரட்டை வேடங்களில்
நடித்த முதல் படம்
என்பது பலரும் சொல்லும்
தகவல். ஆனால், அவர்
'பார்த்தால்
பசி தீரும்'படத்திலேயே சின்ன
வயதில் டபுள் ரோல்
பண்ணியிருக்கிறார்!
ஊர்வன, பறப்பன, ஓடுவன
என அனைத்தையும்
சாப்பிடும் அசைவப்
பிரியர் கமல்.
ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து,
சமைத்துச்
சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம்.
அந்த
நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள்
பசியாறி விடுவார்களாம்!
ஆஸ்கர் விருது பெற்ற
'டிராஃபிக்'
படத்தை இயக்கிய
ஹாலிவுட்
இயக்குநர்ஸ்டீபன்
சோடர்பெர்க்கைப்
போன்று ஒரு ஸ்டெடிகேம்
கேமராவை இடுப்பில்
கட்டி, லென்ஸைத்
தன்னை நோக்கித்
திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன்
யூனிட்'டாக
ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின்
நீண்ட நாள் ஆசை!
நடிகர் நாகேசுக்கும்
கமலுக்குமான
உறவு 'அப்பா-மகன்'
உறவு போன்றது.
தன்னை 'கமல்ஜி'
என்று நாகேஷ்
அழைக்கும்போது,
'எதுக்கு அந்த ஜி' என்ற
கமலிடம், 'கமலுக்குள்ள
ஒரு நாகேஷ் இருக்கலாம்.
ஆனால், நாகேசுக்குள்ள
ஒரு கமல் இருக்க
வாய்ப்பே இல்லை'
என்பாராம் நாகேஷ்!
கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில்
துளியும்
நம்பிக்கை கிடையாது.
'ஹே ராம்' படத்தின்
முதல்வசனமே இப்படித்தான்
இருக்கும்... 'சாகேத்ராம்
திஸ் இஸ் பேக்-அப் டைம்'!
நல்ல மூடு இருந்தால்,
நண்பர்களிடம் தன்
கவிதைகளை வாசித்துக்
காட்டுவார். விரல்
ஜாலங்களை, குரல்
ஜாலங்களுடன் கேட்கக்
கிடைத்தவர்கள்
பாக்கியவான்கள்.இருந்தும்
ஏனோ, இன்னமும்
தொகுப்புகளாக
வெளியிடாமல்
தாமதிக்கிறார் கமல்!
''சந்திக்கும் மனிதர்களின்
பேச்சுக்களை,
நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும்
ஆற்றல் எனக்குத்
தெரிந்து சிலருக்கே உண்டு.
இந்த
ஆற்றல்கைவரப்பெற்றவர்கள்
வரிசையில் முக்கியமான
இடம்
கமலுக்கு உண்டு''என்கிறார்
யூகி சேது!
'மர்மயோகி'யில் கமல்
ஒரு அகோரி கேரக்டர்
செய்வதாக இருந்தார்.
கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட
தாடி வளர்த்தது அதற்காகத்தான்.
'சாமா சானம்'
என்றுதொடங்கும் பாடல்
ஒன்றைக்கூட இதற்காகத்
தயார்
செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி'
டிராப் என்றவுடன்
தாடியை எடுத்துவிட்டார்!
நன்றாகத் தமிழ் பேசும்
ஹீரோயின்களை கமலுக்கு மிகப்
பிடிக்கும். தமிழ்க்
கதாநாயகிகள்
அதிகம்வருவதில்லை என்ற
வருத்தமும்
அவருக்கு உண்டு.
அதனால்தான்
அபிராமியையும்
சினேகாவையும்அழைத்துத்
தன் படங்களில்
வாய்ப்பு கொடுத்தார்!
'காலையில் எழுந்ததும்
யார் முகத்தில் விழிக்க
விருப்பம்?' என்று கமல்
முன்பு நடத்திய
'மய்யம்'பத்திரிகையில்
ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
கமல் சொன்ன பதில்,
'காட்டில் இருந்தால்
நரி முகத்தில்,கட்டிலில்
இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!
பாபர்
மசூதி இடிப்பின்போது யதேச்சையாக
டெல்லியில் இருந்தார்
கமல். விஷயம்
கேள்விப்பட்டதும்
உடனடியாக அப்போதைய
பிரதமர் நரசிம்மராவைச்
சந்தித்து, தமிழ்
திரையுலகம் சார்பாக
எதிர்ப்பைப்
பதிவு செய்தார். பாபர்
மசூதி இடிப்புக்கு எதிராக
சினிமா உலகில்
இருந்து முதன்முதலில்
எழுந்த எதிர்க்குரல்
கமலுடையது!
முட்டையின் மஞ்சள்
கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில்
மிளகுப்பொடி தூவிச்
சாப்பிடுவது கமலுக்குப்
பிடித்தமானது.
கூடவே பிளாக் டீ!
4
ஆண்டுகளுக்கு முன்பு விஜய்
டி.வி-யில் கமலின் பிறந்த
நாளுக்காகப் புகழ்பெற்ற
கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம்
நடத்தினார்கள்.
ஒரு நடிகரைப் பாட்டுடைத்
தலைவனாக
வைத்து நடத்தப்பட்ட முதல்
கவியரங்கம் அதுதான்!
'ஆளவந்தான்'
ரிலீஸின்போது, 'இனிமேல்
100 நாட்கள் எல்லாம் படம்
ஓடாது.
சினிமா பார்ப்பது வாழைப்பழம்
சாப்பிடுவது மாதிரி.
சாப்பிட வேண்டும்
என்று ஆசைப்பட்டால்
அருகில் உள்ள பெட்டிக்
கடையில் வாழைப்பழம்
கிடைக்க வேண்டும்'
என்று சொல்லி, அதிக
தியேட்டர்களில் ரிலீஸ்
செய்யும்
சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!
'யாரையாவது டின்னருக்கு அழைக்க
வேண்டும் என்றால்
யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம்
கேட்கப்பட்டபோது,
'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து,
ஆட்டுப் பாலும்
நிலக்கடலையும் பரிமாற
விருப்பம்' என்று பதில்
சொன்னார்!
'நாகேஷ், தன்னுடைய
திரையுலக
காமெடி வாரிசை உருவாக்காமல்
போய்விட்டார். அந்தத்
தவறை நானும் செய்ய
மாட்டேன்!' அண்மையில்
திரைக்கதைப் பயிற்சிப்
பட்டறை நடத்துவதற்கான
காரணமாக நண்பர்களிடம்
கமல்
பகிர்ந்து கொண்டது இது!
சென்னை புறநகரில்
ஒரு மல்டிப்ளெக்ஸ்
கட்டுவதற்காக கமல்
இடம்வாங்கிப்போட்டிருக்கிறார்.
அனைத்துவிதமான
தொழில் நுட்பங்களுடன்
கூடிய
சினிமா தியேட்டர்களும்,
கேளிக்கை பூங்காக்களும்,
ரெஸ்டாரென்ட்டுகளும்
அங்கு இருக்கும்!
தமிழ்
சினிமாவை 'கோலிவுட்'
என்று பலரும் சொன்னாலும்
கமல் அந்த
வார்த்தையை உச்சரிக்க
மாட்டார். அப்படிச்
சொல்லவேண்டாம் என
மேடைகளிலும்
சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகம்
என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!
வீட்டில்
நான்கு கார்களை வைத்திருக்கும்
கமல்ஹாசன் புதிதாக
ஹம்மர் ஹெச்2 என்னும்
காரை 1.8 கோடி ரூபாய்
விலையில்
வாங்கியிருக்கிறார்.
இது ஸ்டாலின்
வைத்திருக்கும் ஹம்மர்
ஹெச்3 காரைவிட
காஸ்ட்லி!
'உனக்குள்ள
நடமாடிக்கிட்டு இருக்குற
மிருகம்தான் எனக்குள்ள
தூங்கிக்கிட்டு இருக்கு',
'போங்கடா... போய் புள்ள
குட்டிங்களைப் படிக்க
வைங்கடா', 'வீரம்னா என்ன
தெரியுமா..? பயம்
இல்லாதது மாதிரி நடிக்கிறது',
'ஓநாயா இருந்து பார்த்தாதான்
அதோட நியாயம்
என்னான்னு தெரியும்',
'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும்
தெரியுறதில்லை',
'மன்னிக்கிறவன்
மனுஷன்,மன்னிப்புக்
கேட்கிறவன் பெரிய
மனுஷன்' - இவை எல்லாம்
வசனகர்த்தா கமல் எழுதிய
புகழ்பெற்ற வசனங்கள்!
விகடன் டீம்


மறுபடியும் #சுஜாதா

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை.

கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்? -வி.மகேஸ்வரன், காரைக்குடி.

திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? -ஆவடி த.தரணிதரன், சென்னை.

சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? -ந.வந்தியக்குமாரன், சென்னை.

இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்‌த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? -ராஜசுதா, சேலம்.

சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? -எஸ்.ஏ.கேசவன், இனாம் மணியாச்சி.

‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? -த.முரளிதரன், சென்னை.

‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.
#நன்றி அம்பலம் மின்னிதழ்...
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

#நன்றி அம்பலம் மின்னிதழ்...

’மதம் கொண்டு வந்தது சாதி,இன்னும்
மனுஷனத் தொரத்துது மனு சொன்ன நீதி’
மருதநாயகத்துக்காக ராஜா இசையமைத்த ஒரு பாடல். சரியான இசைக்கோப்புகூட இல்லாத முரட்டு ஒலிப்பதிவுதான். ஆனால் அந்த மெட்டும் பாடும் விதமும் என்னவோ செய்கிறது. இந்த direct, raw impactதான் ராஜாவின் உயிர்ப்புள்ள இசை, அவரது ஒரே அடையாளம்.
இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக ராஜாவே எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.


Kamal Hasan's instincts..
1) In 1978, his tamil movie “Sivappu
Rojakal” got released. He played the
role of a Psychopath killer.
One year later, a guy
called
Psycho Raman was caught for
brutally murdering people
especially women.
2) In 1988, kamal played the role of a
unemployed youth in the movie
“Sathya”. In 89-90’s our country faced
lot of problems due to
unemployment.
3) In 1992, his blockbuster movie
“Devar Magan” got released. Its a
village based subject. There will be
some scenes portraying communal
clashes. Exactly a year later in 1993,
there were many communal clashes
in southern districts.
4) We all know in 1996 many people
in our country was cheated by
finance companies. Our Kamal Hasan
has clearly depicted this in his movie
“mahanadhi” which got released in
1994 itself.
5) In “heyram”(2000), there are some
scenes relating to Hindu Muslim
clashes . We all know 2 years later,
godhra(Gujarat riots) incident
happened.
6) He used a word called ‘tsunami’ in
his movie “Anbesivam”(2003).The
word ‘tsunami’ was not known to
many people before. In 2004,
‘tsunami’ stuck the east coast of our
country and many people lost their
lives.
7) In ”Vettaiyadu Vilayadu ”(2006)
there are two characters called ila &
amudhan who played the roles of
psychopath killers. After 3 months of
release of the movie, the noida
serial killing came to light
(moninder/sathish)
8) The world is talking about the
Ebola virus now, but the star actor
has once again made heads turn, as
he had mentioned about in his film
'Dasavatharam' in 2008. In the scene
where he tries to get back the parcel
which contains the bio weapon,
Kamal says "It's a synthetic bio
weapon, It's a Ebola -Marburg
combination. It's very lethal."
_/\_ Ulaganayagan - The Latest Nostradamian
# viaWhatsapp

ஆ காய விமானம்
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பாராசூட்
பற்றி கனவு கண்டவன் மோனாலிஸாவைப்
படைத்த ஓவியன் டாவின்ஸி.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல...
கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
மனித இனத்தின்
வளர்ச்சி பற்றி தொலைநோக்கோடு கனவு காண்பதுதான்
பிரதான வேலை. 13
ஆண்டுகளுக்கு  முன்பு கார்கள் பற்றி
சுஜாதா கண்ட பல கனவுகள்
இப்போது  நடைமுறைக்கு வந்துவிட்டன.
சுஜாதாவின் இந்தக் கனவுகள் எந்த
அளவுக்கு நனவாகி இருக்கின்றன?

1.செல்ஃப் டயக்னாஸ்டிக்ஸ்
காருக்குள்ளேயே தன்னைத்தானே பரிசோதித்துப்
பார்த்துக்கொள்ளும் டயக்னாஸ்டிக்ஸ்
இருக்கும். அதிலிருந்து ஜி.பி.எஸ்
எனும் செயற்கைக் கோள் வழியாக
ஆட்டோமொபைல்அசோசியேஷன்காரர்களுக்கு செய்தி போய்,
காரில் ஏதாவது கோளாறு வரப்
போகிறது என்றால்,
டிரைவருக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்து விடுவார்களாம்!
விஷயம் சீரியஸ் என்றால், உதவிக்கான
காரையும் அனுப்பி விடுவார்களாம்.

2.டிரைவர் மானிட்டர் சிஸ்டம்
டிரைவர் மானிட்டர் சிஸ்டம் என்பது,
நீங்கள் எத்தனை தடவை ஸ்டீயரிங்கைத்
திருப்புகிறீர்கள்,
அடிக்கடி திருப்புகிறீர்களா, நீங்கள்
களைப்பாக
இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்து இளைப்பாறி களைப்பாறச்
சொல்லுமாம்.

3.ஸ்மார்ட் கார்டு
உங்கள் காருக்கென்று உங்களிடம்
ஒரு 'ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பார்கள்.
அதனால்தான் காரைத் திறக்க முடியும்.
இன்ஜினைக் கிளப்பி சீட்டை உங்கள்
பழக்கத்துக்கு ஏற்ப 'ஜம்’ என்று சீர்
செய்யும். டாக்ஸ் கட்டக் கூடப்
பயன்படுத்தலாம்.

4.ஹைட்ரஜன் கார்
எதிர்காலத்தில் கார்கள் ஆல்கஹாலில்
ஓடலாம் என்கிறார்கள். கேஸ் (Gas) கூட
பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் கார்களும்
வரலாம் - பெட்ரோல் தீர்ந்து போய்விடும்.

5.ஆட்டோமேட்டிக் பிரேக், வைப்பர்
குறுக்கே போகும் பாதசாரிகள், மாடுகள்,
கார்கள் இவைகளையெல்லாம் கார்கள்
தானாகவே கண்டுபிடித்து பிரேக் போடும்.
மழை வந்தால் தானாகவே வைப்பர்
வேலை செய்யும்.

6.பார்க்கிங் சென்ஸார்
பார்க் செய்வதற்கு கஷ்டப்பட
வேண்டியதில்லை.
காரை விட்டு இறங்கியதும், கார்
தானாகவே தன்னை பார்க்
செய்து கொள்ளும்.

7.லேசான கார்கள்
எதிர்கால கார்கள் லேசாக இருக்கும்.
கொஞ்சம் பலமாக ஊதினால் நகரலாம்.
அதெல்லாம் கி.பி.2000-க்குள் வரும்
என்றார்கள். நீங்களும் இருக்கப்
போகிறீர்கள். நானும். பார்க்கலாம்!

சுஜாதாவின்
பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப்
படிக்கவும் !!!)
1. ஒன்றின் மேல்
நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு,
வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை
இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக்
கேள்வி கேட்டு இப்போது
தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும்
வேலை சொல்வது பல சமயங்களில்
கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு அவர்கள்
சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்
கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய்
நூறு கிராம் காப்பி பவுடர் (அ)
ரேஷன் கார்டு புதுப்பித்தல்
இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..
3. மூன்று மணிக்குத் துவங்கும்
மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ்
கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய்
சொல்வதற்கு ரொம்ப ஞாபக
சக்தி வேண்டும். இந்த
உபத்திரவத்துக்கு உண்மையைச்
சொல்லி விடுவது சுலபம்.
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப்
போல் மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு
நாளைக்குப்
பொது விஷயங்களைப் படியுங்கள்.
பொது விஷயங்கள் என்றால் கதை,
சினிமா, காதல் இல்லாதவை.
உதாரணம் – யோக்கியமான
செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள்
அல்லது லைப்ரரியிருந்து ஒரு
புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப்
பாருங்கள். சொந்தமாக உங்கள்
உழைப்பில், முயற்சியில்,
யோக்கியமாக,
மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த
முறை அப்பாவிடம் ஆயிரம்
ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார்
கேட்கும் முன்.
6. இந்தத் தகவல்களைப் படிக்கும்
நிலைமை பெற்ற நீங்கள் இந்திய
சனத்தொகையின்
மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில்
ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக
அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம்
ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான
ஞாயிறன்று என்ன செய்தாலும்
காதல் பிஸினஸ் வேண்டாம்.
காதலுக்கு ரொம்பச் செலவாகும்.
மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ
அது. பொய் நிறையச் சொல்ல
வேண்டும். வினோதமான
இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான்
உங்களுக்கு முக்கியம். குறிப்பு:
பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும்,
அவர்களுக்கு கர்சீப் முதலியன
ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும்,உபத்திரமில்லாத
கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.
8.எட்டு முறை மைதானத்தைச்
சுற்றி ஓடினால் எந்தச்
சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும்.
ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச்
சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ
தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள்..
எதையாவது வீசி எறியுங்கள்..
உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர்
ஆரோக்கியமான வடிகால் தேவை.
ராத்திரி சரியாக தூக்கம் வரும்.
கன்னா பின்னா எண்ணங்கள்
தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக
இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள்
வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்
போனால்
ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம்
அல்லது புத்தகம் படிக்கல

10. படுக்கப் போகும் முன்
பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா,
அண்ணன்,
தங்கை யாருடனாவது பேசவும்
(பேசுவது என்று சொன்னவுடன்
காதலியுடன் என்று நினைக்க
வேண்டாம், நான்
சொன்னது குடும்பத்தினருடன்
மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக்
அல்லது காலேஜில் நடந்த
நிகழ்வுகள். சப்ஜெக்ட்
முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம்
ஒன்று என்று முயற்சி செய்து தான்
பாருங்களேன்...

Previous PostOlder Posts Home