"கேள்வியின் நாயகன்"

பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன்.
இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே .
அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு.
அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக
அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.


அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை மாநகர உதவி ஆணையர். ரங்க ராஜன் மாநகர காவல் ஆணையர்.

கார்த்திகேயன்: என்ன விசயம் ஸார் திடீரென மத்ய ரயில் நிலயததிற்கு வர சொல்லிருக்காங்க?

ரங்க ராஜன்: ஒன்றுமில்லை , ஒரு சந்தேக கேஸ் நம்மகிட்ட ஒப்படைக்கனுமாம்.

கார்த்தி : என்ன கேஸ் சார் ?
ரங்க: தெரியல நிச்சயமா அவங்க கன்ட்றொலுக்கு மீறின விசயமா தான் இருக்கும்.

  இந்த உரையாடலின் சொல்லோசை அடங்கிய நேரம் கார் மத்த்ய ரயில் நிலையத்தின் வாயிலில் ஓய்ந்தது.



சிறப்பு நுழைவு வாயிலில் உள்ளே சென்றனர் இருவரும். உள்ளே நூலாண்து ப்ளாட்பாரத்திர்க்கு செல்லும் வழியில் முதல் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி 30 அடி தூரம் நடந்து வலதுபுறம் திரும்பி முதல் திருப்பத்தில் உளது ரயில்வே காவல் நிலையம். உள்ளே சிங்கிய காவலர் வடதமிழில் வரவேற்றார். தான் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக கைது செய்து வைத்திருப்பதாகவும் அவரை தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டியே அழைத்ததாக அறை தமிழில் சொல்லி முடித்தார். சரியென சென்று கைது செய்ய பட்டவரை பார்த்தார் ரங்கராஜன்.


சிங்கன் ஒரு அயல்நாட்டு மதுபான தரகர், சிங்கப்பூர் , மலேஸியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மதுபாணங்களை சென்னை ஏர்பொர்டில் இருந்து இறக்குமதி செய்து பகிர்ந்தளிப்பவர். அதற்க்கான அரசாங்க அனுமதியுடன் தொழில் செய்பவர், அப்படிருக்க இன்று யன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய பட்டார் . குழம்பினான் கார்த்திகேயன் ,ஒப்படைத்தவரை விசாரிப்பதும் நியாயமில்லை. ஏதேனும் அரசியல் காரணம் அல்லது அரசாங்க நியாயம் இருக்குமென தன்னை தானே சாந்தி படுத்திக்கொண்டான், கார்த்திகேயன்.

பின்னர், சென்னை மாநகர காவல் ஆணையம் விசாரணை கூடத்தில், சிங்கணை விசாரிக்க கார்த்திகெயனை கேஸ் இன்சார்ஜ் ஆக பொறுப்பு ஏற்க்க செய்தார் ரங்க ராஜன். கார்த்திகேயனும் தன்னால் இயன்ற கேள்விகளை தனக்கு தெரிந்த அத்துணை மொழியிலும் கேட்டு பார்த்தான், ஹ்ம்ம்ூம் ஒன்றும் பயனில்லை, சிங்கநிடம் இருந்து ஒரு மொழியிமில்லை . பின்னர் கார்த்திகேயன் சென்னை ஏர்பொர்டில் சிங்கனின் பார்ஸல் ரிஸீவ்ட் ரிஸீட் ஐ சோதிக்க அதும் ஒன்றும் துறும்ப வில்லை , இதிலிருந்து கார்த்திகேயனுக்கு குழப்பம் துவங்க " ஏர்போர்ட் ரசீது சரிதான், ரயில் நிலய ரசீது கூட இருக்கே அப்புறம் என்ன காரணம் இவரை கைத்து செய்ய, பேசாமல் ரயில்வே காவல் நிளயத்தில் விசாரிக்கலாம்" அதுவே சார் என்று கிளம்பியவன் நெற்றியில் ஒதிதிரா சிந்தனை ஓங்கி அடிக்க, கையிலிருக்கும் பார்சேல் பைய்கள் நியாபகம் வர ஓடி சென்று ஆராய்ந்து பார்க்க.

அந்த பையில் இருந்தவை எல்லாம் வெறும் மதுபாண பட்டில்களே அத்தனையும் செந்நிற ராதிதஹ நிறம் கொண்ட மதுபாணகளே, அனைத்தும் சதுர பக்கங்கள் கொண்ட கண ஸெவ்வக பாட்டில்களே . அவற்றுள் ஒன்று மட்டும் நீல நிறத்தவை ஒரே பிராந்தில் இரண்டு நிறமோ என நகைத்வனின் கை தவறி பாட்டில் கீழே விழுந்து நுரைத்தது தரை.

கூகுல் பக்கத்தில் மேக்கோ டைநா என்ற பெயரை தேட அவை நீல நிற பாட்டில்களையே காட்ட பிின்னி சிவப்பு நிறம் என்னவாக இருக்கும் சிந்தித்து, ஆராய்ய துவங்கினான் கார்த்திகேயன், உடனே செந்நிற பாட்டிலை திறக்க முற்பட்டான் ஆனால் அவை 3 ஸீலிந் கொண்டது என்றபின் சந்தேகம் வலுவானது மதுபாணத்திர்க்கு ஒரு ஸீலிந் தான் இருக்கும் என்பது அவன் அறிந்ததே.

அப்போ அங்கு வந்த மொப்ப நாய் கார்த்திகெயனை செல்லமாய் பற்ற திடிக்கிட்டு பாட்டிலை மீண்டும் தவறவிட்டான் , பாட்டில் தரையில் நொறுங்கி திரவம் அவன் பாதத்தை தீண்டவே கவனித்தான் தரையை , நுரைக்கவில்லை தரை.

மாறாக, ஒரு மனித சிறுநீரகம் இருந்தது பயந்து போய் பதறிப்போய் உறைந்து போனான் கார்த்திகேயன். ஆணையர் அலுவலகம் அதிர்ந்து பரபரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நின்றது, மீதமுள்ள பாட்டில்கள்.

ஆகா மொத்தம் ; 27 பாட்டில்கள் நீல நிறம் கொண்டதை தவிர்த்து, அதில் 6 சிறுநீரகம் ; 8 மனித கண்கள்; 5 வயது வந்த இதயங்கள்; மேலும் 8 கணயங்கள் ஆகியான் இருந்தன.

(தொடரும்)
விநோத மரணங்கள் இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?



முன்பே தெளிவுடன் குறிக்கொள்கிறேன் . இக்கதை முழுதும் கற்பனையே இதில் இடம் பெறும் செயல்களும் நடக்கும் சம்பவங்களும் ஏன் இடங்களும் கற்பனையே. இதில் கூற பாடும் இடங்களை இன்னும் நான் நேரில் பார்த்ததில்லை . ஆகையால் அங்கே குறிப்பிடும் அடையாளங்கள் இல்லையென குரைக்காண வேண்டாம் . ஆங்காங்கே கொடூர மரணங்களும் வர்ணிக்க பாடும் என்பதால் கொஞ்சம் திட மனத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் இக்கதையில் நான் முக்கியமாக கவனிக்க போவது அடுத்த திருப்பதை எவரும் யூகிக்காத வண்ணம் அமைத்தலை மட்டுமே.
அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்!
முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்!
பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்!
ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்!
தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்!
மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!

நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!

நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!

என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!

எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!

ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !

வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!

இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!

என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது!

தொலைந்தாலும் பரிச்சயம் நான் !
இருந்தாலும் அலட்சியம் நான்!

தேடலின் நாயகன் நான் !
எனக்காய் காத்திருக்கும் காலம் தான்!

அந்நாளை தேடியே நகரும் நாழிகையில் நாண்டு கொள்ளாமல் நடிக்கிறேன் நான்!
Next PostNewer Posts Previous PostOlder Posts Home