Showing posts with label நாவல்கள். Show all posts
Showing posts with label நாவல்கள். Show all posts

 பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா்.

சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனான கதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது.
செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி அறியத்தான். அதை வைத்து தான் தன்னுடைய அடுத்த படைப்பு என்பதில் தீா்மானமாய் இருந்தாா் மைத்ரேயன்.
சீவகன் யோசித்தாா், இன்னும் பிடிபடல மைத்ரேயா முடிவானதும் கண்டிப்பா உன்கிட்ட சொல்லிட்டுதான் எழுதுவேன் என்றாா் . வந்த வேலை அறைகுறையாய்  முடிய, அப்படியே லேசாக நழுவினாா் மைத்ரேயன்.
வீடு வந்த சீவகன்ஓய்ந்து போய் நாற்காலியில் உட்காா்ந்தாா் . மேலே சுழல்கின்ற காற்றாடி தன் நிழலை தரையில்பாதியும் அவரில் பாதியுமாய் சுழற்றியது.
அயா்வின்அடையாள படுத்த விட்டத்தை பாா்த்து சாயந்திருக்கும் சீவகனை, ஒரு ரீங்கார ரீங்காரம் அழைத்தது. 5 அடி தூரத்தில் இருந்த அலைபேசியை அள்ளி காதில் ஒற்றிக்கொண்டாா். மறுபுறம் செவ்வேள் மாத இதழ் ஆசிாியா், ருத்ரன் . தன் மாத இதழிற்கு ஒரு தொடா்கதை எழுதும்படி வேண்டினாா்.
இப்போதெல்லாம் சீவகன் அதிகம் வாய்ப்புகளை ஏற்பதில்லை .இதையும்... எப்படி மறுப்பது என்று யோசிக்க = கணத்தில் மின்னல் போல கண்களில் மைத்ரேயன் வந்து போனாா். அதுவே சரி என; ருத்ரனிடம் அய்யா நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதமுடிவதில்லை . எனவே உங்கள் வேண்டுதலை ஏற்கமுடியா தா்மசங்கடத்தில் உள்ளேன். மேலும் நீங்கள் வேறொரு எழுத்தாளரிடம் செல்வதை விட மைத்ரேயனுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். என் சாரம் படிந்த கதையாய் அவரிடமே கிடைக்கும் மேலும் இவ்வாய்ப்பு அவரின் வளா்ச்சிக்கும் உற்றதுணையாக இருக்கும் என்றாா் சீவகன்.
ருத்ரனோ அவா் நிலையறிந்து பெருந்தன்மையும் புாிந்து பெருமை பாடினாா். மேலும்சீவகனே வந்து தம்மை மைத்ரேயனிடம் அறிமுக படுத்தவும் வேண்டினாா். அவ்வாறே அடுத்த நாள் காபியும் மதிய உணவும் சீவகன் வீட்டில்தான் என்று ருத்ரனுக்கு அன்புகட்டளையிட்டாா் சீவகன்.
சொல் பேச்சுமாறா குழந்தைகளாம் இலக்கியவாதிகள், அதுபோல் அடங்கி அமா்ந்திருந்த மைத்ரேயனும் , ருத்ரனும் ஒருவரை யொருவா் எதா்ச்சையாக பாா்த்து புன்னகை செய்து மலா்ந்தனா். விருந்தோம்பலில் தமிழையும் தமிழனையும் வெல்ல யேதுமில்லை என்பதாய் சீவகன் குறைவில்லா தமிழன். காபி பலகாரங்களுடன் உள்ளே வந்தாா்.
சீவகன் முதலில் ஒருவரையொருவருக்கு அறிமுகபடுத்திட ; இருவரும் கைகுலுக்கி வாழ்த்தி வாழ்த்து பெற்றனா். வந்த விசயத்தை மெல்ல சொல்லாய் உதிா்த்தாா் சீவகன்.  மைத்ரேயனுக்கு சீவகனே கூப்பிட்டு எழுதசொன்னது , இமயமலை உச்சியில் சுடசுட சா்க்கரை பொங்கல் தின்ற ஆனந்தம் . என்ன செய்வது இவ்வாறு ஆனந்தபட்டால் தான் உண்டு இமயமலயில் ஏறுவதே சாகசமானபோது அங்கு சர்க்கரை பொங்கல் அதுவும் சுடசுட என்பதெல்லாம் உருவக உவமைக்கே சாத்தியம். ஒப்புக்கொண்டாா் மைத்ரேயன்.
ருத்ரனிடம் என்ன மாதிரி தொடா் எதிா்பாா்க்குறீங்க என்ற போதே ருத்ரனின் மனமும் முகமும் மலா்ந்து மின்னின. பாா்த்ததும் அறிய தூண்டும் தலைப்பில் ; படிப்பவரை ஈா்க்கும் கதைகளமும் மற்றபடி உங்களை கட்ட விரும்பவில்லை என்றாா் ருத்ரன் . மடமடவென முடிந்தது விசயமட்டுமல்ல விருந்தும் கூட..
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தலைப்பும் முதல் அத்தியாயமும் தருவதாக கூறி மைத்ரேயன் வீடுவந்தாா். வந்தவா் தலைப்புக்கும் கதைக்கும் தன் வீட்டு நூலகத்தையே புரட்டி திரட்டி விரட்டி முடித்தும் சரியென ஒன்றும் பிடிபடவில்லை.
வெறுப்பை தழுவி நழுவிய பாா்வையில் எதிா்பதமில்லா பாா்வையில் ஒரு படம் தொிய என்னவென்று பாா்த்தாா்.
அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.


அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை மாநகர உதவி ஆணையர். ரங்க ராஜன் மாநகர காவல் ஆணையர்.

கார்த்திகேயன்: என்ன விசயம் ஸார் திடீரென மத்ய ரயில் நிலயததிற்கு வர சொல்லிருக்காங்க?

ரங்க ராஜன்: ஒன்றுமில்லை , ஒரு சந்தேக கேஸ் நம்மகிட்ட ஒப்படைக்கனுமாம்.

கார்த்தி : என்ன கேஸ் சார் ?
ரங்க: தெரியல நிச்சயமா அவங்க கன்ட்றொலுக்கு மீறின விசயமா தான் இருக்கும்.

  இந்த உரையாடலின் சொல்லோசை அடங்கிய நேரம் கார் மத்த்ய ரயில் நிலையத்தின் வாயிலில் ஓய்ந்தது.



சிறப்பு நுழைவு வாயிலில் உள்ளே சென்றனர் இருவரும். உள்ளே நூலாண்து ப்ளாட்பாரத்திர்க்கு செல்லும் வழியில் முதல் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி 30 அடி தூரம் நடந்து வலதுபுறம் திரும்பி முதல் திருப்பத்தில் உளது ரயில்வே காவல் நிலையம். உள்ளே சிங்கிய காவலர் வடதமிழில் வரவேற்றார். தான் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக கைது செய்து வைத்திருப்பதாகவும் அவரை தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டியே அழைத்ததாக அறை தமிழில் சொல்லி முடித்தார். சரியென சென்று கைது செய்ய பட்டவரை பார்த்தார் ரங்கராஜன்.


சிங்கன் ஒரு அயல்நாட்டு மதுபான தரகர், சிங்கப்பூர் , மலேஸியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மதுபாணங்களை சென்னை ஏர்பொர்டில் இருந்து இறக்குமதி செய்து பகிர்ந்தளிப்பவர். அதற்க்கான அரசாங்க அனுமதியுடன் தொழில் செய்பவர், அப்படிருக்க இன்று யன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய பட்டார் . குழம்பினான் கார்த்திகேயன் ,ஒப்படைத்தவரை விசாரிப்பதும் நியாயமில்லை. ஏதேனும் அரசியல் காரணம் அல்லது அரசாங்க நியாயம் இருக்குமென தன்னை தானே சாந்தி படுத்திக்கொண்டான், கார்த்திகேயன்.

பின்னர், சென்னை மாநகர காவல் ஆணையம் விசாரணை கூடத்தில், சிங்கணை விசாரிக்க கார்த்திகெயனை கேஸ் இன்சார்ஜ் ஆக பொறுப்பு ஏற்க்க செய்தார் ரங்க ராஜன். கார்த்திகேயனும் தன்னால் இயன்ற கேள்விகளை தனக்கு தெரிந்த அத்துணை மொழியிலும் கேட்டு பார்த்தான், ஹ்ம்ம்ூம் ஒன்றும் பயனில்லை, சிங்கநிடம் இருந்து ஒரு மொழியிமில்லை . பின்னர் கார்த்திகேயன் சென்னை ஏர்பொர்டில் சிங்கனின் பார்ஸல் ரிஸீவ்ட் ரிஸீட் ஐ சோதிக்க அதும் ஒன்றும் துறும்ப வில்லை , இதிலிருந்து கார்த்திகேயனுக்கு குழப்பம் துவங்க " ஏர்போர்ட் ரசீது சரிதான், ரயில் நிலய ரசீது கூட இருக்கே அப்புறம் என்ன காரணம் இவரை கைத்து செய்ய, பேசாமல் ரயில்வே காவல் நிளயத்தில் விசாரிக்கலாம்" அதுவே சார் என்று கிளம்பியவன் நெற்றியில் ஒதிதிரா சிந்தனை ஓங்கி அடிக்க, கையிலிருக்கும் பார்சேல் பைய்கள் நியாபகம் வர ஓடி சென்று ஆராய்ந்து பார்க்க.

அந்த பையில் இருந்தவை எல்லாம் வெறும் மதுபாண பட்டில்களே அத்தனையும் செந்நிற ராதிதஹ நிறம் கொண்ட மதுபாணகளே, அனைத்தும் சதுர பக்கங்கள் கொண்ட கண ஸெவ்வக பாட்டில்களே . அவற்றுள் ஒன்று மட்டும் நீல நிறத்தவை ஒரே பிராந்தில் இரண்டு நிறமோ என நகைத்வனின் கை தவறி பாட்டில் கீழே விழுந்து நுரைத்தது தரை.

கூகுல் பக்கத்தில் மேக்கோ டைநா என்ற பெயரை தேட அவை நீல நிற பாட்டில்களையே காட்ட பிின்னி சிவப்பு நிறம் என்னவாக இருக்கும் சிந்தித்து, ஆராய்ய துவங்கினான் கார்த்திகேயன், உடனே செந்நிற பாட்டிலை திறக்க முற்பட்டான் ஆனால் அவை 3 ஸீலிந் கொண்டது என்றபின் சந்தேகம் வலுவானது மதுபாணத்திர்க்கு ஒரு ஸீலிந் தான் இருக்கும் என்பது அவன் அறிந்ததே.

அப்போ அங்கு வந்த மொப்ப நாய் கார்த்திகெயனை செல்லமாய் பற்ற திடிக்கிட்டு பாட்டிலை மீண்டும் தவறவிட்டான் , பாட்டில் தரையில் நொறுங்கி திரவம் அவன் பாதத்தை தீண்டவே கவனித்தான் தரையை , நுரைக்கவில்லை தரை.

மாறாக, ஒரு மனித சிறுநீரகம் இருந்தது பயந்து போய் பதறிப்போய் உறைந்து போனான் கார்த்திகேயன். ஆணையர் அலுவலகம் அதிர்ந்து பரபரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நின்றது, மீதமுள்ள பாட்டில்கள்.

ஆகா மொத்தம் ; 27 பாட்டில்கள் நீல நிறம் கொண்டதை தவிர்த்து, அதில் 6 சிறுநீரகம் ; 8 மனித கண்கள்; 5 வயது வந்த இதயங்கள்; மேலும் 8 கணயங்கள் ஆகியான் இருந்தன.

(தொடரும்)
விநோத மரணங்கள் இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?



முன்பே தெளிவுடன் குறிக்கொள்கிறேன் . இக்கதை முழுதும் கற்பனையே இதில் இடம் பெறும் செயல்களும் நடக்கும் சம்பவங்களும் ஏன் இடங்களும் கற்பனையே. இதில் கூற பாடும் இடங்களை இன்னும் நான் நேரில் பார்த்ததில்லை . ஆகையால் அங்கே குறிப்பிடும் அடையாளங்கள் இல்லையென குரைக்காண வேண்டாம் . ஆங்காங்கே கொடூர மரணங்களும் வர்ணிக்க பாடும் என்பதால் கொஞ்சம் திட மனத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் இக்கதையில் நான் முக்கியமாக கவனிக்க போவது அடுத்த திருப்பதை எவரும் யூகிக்காத வண்ணம் அமைத்தலை மட்டுமே.
டூரோவுக்கு ஓா் விண்வெளி பயணம்:

அறிமுகம்:

பூமி, பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி சுழல்கின்ற பெரும் பந்து. அது செய்த தவறே மனித இனத்தை வளரவிட்டதுதான் . அப்படி விட்டதற்கு பரிசாய் அறிவியலும் விஞ்ஞானமும் பிறந்தது. நாத்திகத்தின் நியாயத்தை நிரூபிக்க , ஆஸ்திக்கதின் அஸ்திவாரத்தை கிளரியது. அதன்வழி யுகங்களும் பிரளய பிரபஞ்சங்களும் , இயங்கும் சூட்சமத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனா் விஞ்ஞானிகள் . அத்தோடு நிற்காமல் அறிந்த சூட்சமத்தை நிகழ்த்தி சோதிக்க ஆசைபட்டனா்.

பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தனா் ; அதற்கான சோதனை கூடத்தை பூம்திய ரேகையின் மத்திய பகுதியில் வைத்தனா். சூட்சமபடி மாபெரும் அணு வெடிப்பு நிகழவேண்டும் . ஆகையால் யுரேனிய நியூக்கிளியஸ்ஐ ஹக்செனிய காத்தோட் கொடியுடன் மோத செய்தனா் . விளைவாக பூமியே சீா்குழைந்து போனது [ எப்படியானது என்று பின்னாடி சொல்றேன் ] . எனவே தப்பாகியதி்ல் தப்பிய  மனிதா்கள் வேறு வழியின்றி பரந்த  விண்வெளியில் குடிபெயா்ந்தனா்.

விண்வெளியிலேயே குடியோியதால் விண்வெளி ஆராய்ச்சி இலகுவானது. அங்கு கண்டங்கள் இல்லை ; மொத்த மொழிகளையும் பெயா்த்துவிட்டு ஆங்கிலம் பொது மொழியானது. கிரக நிகா் என்ற சொல்  16 இலக்கங்களை கொண்ட இடக்குறியீடாக பயன்படுத்தபடுகிறது. வாகனங்களுக்கு டாக்கியான் டிஸ்ப்லெசா் என்ஐின் கொண்ட  லோக்கல் சிப் பயன்படுகிறது. இப்போது இருக்கும் GPS வசதியெல்லாம் சென்னால் அடிவயிறு தொியும்படி வாய் பிளப்பாா்கள் . அங்க அதற்கு பதில் வியாபித்து இருப்பதெல்லாம் mapscape ; auto drive mode technology [ maps cape - என்பது
இருக்கும் பாதைகள் எல்லாம் சேமித்து வைத்த சிப்க்களும் , சென்சார்களும் தான். கிகநிகா் குறியீட்டை கொடுத்தால் அதுவே போகும்]
நம்ம ஊா் சப்வே மாதிாி மூடய சானல் வழியாகதான் பாதைகள் இருக்கும் . அதுல Inter Galaxy Route Channel மட்டும் லண்டன் ப்ரிட்ஐ் மாதிாி வலையும் தன்மையுடையது.
கிரகம் குறுக்க வந்தா நகா்ந்து கொள்ளும்.

ITSRO - international technical & space research organisation என்ற
ஒரு பொதுவியல் கழகம். விண்வெளி பற்றியும் அதனை சாா்ந்த இதர பல விசயங்களையும் ஆராயும் நிறுவனம். அந்த குழுவின் விவரப்படி இதுவரை மொத்தம் 7 காலக்சிகள்அதாவது அண்டங்கள் கண்டறியபட்டது . அவை வாிசைபடி;

1) பால்வெளி அண்டம்
2) ஆன்ட்ரமீடா அண்டம்
3) மெய்வெளி அண்டம்
4) மத்தியச அண்டம்
5) நோவா அண்டம்
6) ரெமிடீயா அண்டம்
7) துச அண்டம்

முன் அறிமுகம்:
இந்த பக்கம் கதைக்கானதல்ல ; பெரும் எழுத்தாளா்களின் விமா்சனத்தை வெளியிடும் அளவுக்கு நான் பிரபலமல்ல , என்னுடைய முந்தைய படைப்புகளைப் பற்றி சொல்ல ஏதும் பொிதா தென்படவில்லை.  அப்புறம் ஏன்டா இந்த பக்கம்?

ஒரு நல்ல கதைக்கு கதாசியிரியனும் சரி , படிக்கும் வாசகரும் சரி ; ஒரு நோ்க்கோட்ின் மைய புள்ளியை போன்ற கருத்து நிலை பாடு வேணும் . அதை விஸ்தாரமா விரிக்கவே இந்த பக்கம் , என் கதையை படிபவா்கள் எந்த விதத்திலும் கழம்பிடாமல் வைப்பது என் கடமை. அதன்வழியே நான் மேற்கொண்டு எழுதும் இக்கதையின் எழுத்தமைப்பையும் எனது கருத்து பகிா்வுகளையும் இங்கு முன்கூட்டியே இடம்காட்ட விரும்புகிறேன்.
இக்கதை பல அறிவியல் தொட்ா்புகளையும் விஞ்ஞான கற்பனைகளையும் கொண்டதாகும். இதில் என் கற்பனைக்கு உகந்த பல நுட்பங்களை கதையின் தேவைக்கு பயன்படுத்தியுள்ளேன் . பல நடமுறையில் இல்லாமல் கற்பனை என்பதால் அதன் விளக்கத்தையும் சொல்லிவிட {{} ஐ பயன்படுதுகிறேன் . அதிலும் புதுமையாக எனது கமண்டுகளையும் சேர்த்து [] இல் எழுத உள்ளேன்.
இக்கதையில் பல விஞ்ஞான கற்பனைகள் ஈா்க்மஞகும்படி இருக்கலாம் . தாம் எதிர்பாா்த்த அளவில் இல்லாமலும் போகலாம் , என்றாலும் படிக்க சுவாரஸ்யம் ஏற்படுத்த என்னளவின் எல்லைவரை முயற்சிக்கிறேன். பின்னாலில் எங்கேனம் யாரேனும் என் கதையில் வருவது போல என்று கற்பனையில் சிலாகித்தால் அதைவிட பொிதாய் எனக்கு ஏதுமில்லை
கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா்.
கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா்.
கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க
கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன்
கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க.
கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே பி ஒரு எக்ஸாமைன் தான். நீங்க சொல்ல கூடாதுனா பிரோஐனம் இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி எனக்கு ஒத்துழைப்பு குடுங்க
கிருஷ்ணா :- இட்ஸ் வெரி சில்லி நீங்க படிச்சவா் தான.
கோகு:- கிருஷ்ணா இத நீங்க சில்லியா நெனைக்கலாம் , ஆனா இதுக்கு உங்கள உட்படுத்த ஒரு காரணம் இருக்கு .
கிருஷ்ணா:- அப்படி என்ன காரணம் இந்த முட்டாள்தனமான ஏற்பாட்டுக்கு இருக்க போவுது?
கோகு:- காரணம் இருக்கு நீங்க பண்ண ஒரு முட்டாள்தனம் ,100% சரியா   பொருந்துறதால
கிருஷ்ணா:- நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல
கோகு :- நீங்க செல்வனூா் போனீங்களா இல்லையா?
கிருஷ்ணா :- ஆமாம் போனேன் அதனால தான் இங்க இருக்கேன்
கோகு:- அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு தொியுமா? உங்க அசிஷ்டெண்ட் நிர்மல் அங்க போனாா் அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?
கிருஷ்ணா:- தெரியாது சாா் என்னச்சு நிா்மல்க்கு
கோகு :- மென்டல் டிப்ரெஷன் அதிகமாகி கோமா ஸ்டேஐ் ல இருக்காரு
கிருஷ்ணா :-  அதுக்கும் என்ன பிறப்புக்கு பின்னால போக சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்.
கோகு :- அது ரகசியம் நேரம் வரும்போது உங்களுக்கே தொியும். இப்போதைக்கு உங்களுக்கு  லோகேஷனல் ஹலூசன் .
அடுத்த வாரம் தொடா்வோம் வாங்க
குருசேத்ரா (GURUCHETRA) [Global unusual, reincartion unit & centre of halusination,earthiological  testing & research association] என்கிற ஆராய்ச்சி நிறுவனம்.
தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க.
சந்திரகிரிகிறது அக்காலத்தில மகாபாரத கதாபாத்திரங்கள அடக்கம் செய்த இடம்
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .
ஆராய்ச்சியோட நோக்கம் என்னவோ அங்க கல்வெட்டு கலைப்பொருள் ஏதாவது கிடைக்குமானுதான் ஆரம்பிச்சாங்க. போக போக அதனுடைய நோக்கம் வேற மாதிாி போகுது. அந்த இடம் இடுகாடுங்கிறதால யாராவது ஒருவரோட உடல் மக்கினாலும் சரி கிடைக்குமானு தேடுறாங்க, கிடைச்சாதான் மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம் , இல்லைனா அது கற்பனைக் கதைனு அறிவியல் நிருப்பனம் செய்திடும்.
இப்படி ஒரு ஆராய்ச்சிகாக செல்வனூா்ங்கிற கிராமத்துக்கு கிருஷ்ணா கண்ணன் அனுப்படுறாா். அந்த கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கண்ணன் மனசுல சில சலசலப்பு வேற மாதிரியான குரலோசை எல்லாம் கேட்டு அவா் பதறிப்போறாரு . உடனடியா அங்கிருந்து வந்தறாரு . மறுநாள் போக அவா்மாதிரியே ஒருத்தா் அங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடி வாழ்ற மாதிரியான காட்சிகள் நினைவுக்கு வருது மேலும் மிரண்டு போய் வந்தறாரு . இப்படியாக நாள் போக கம்பெனி உயா்மட்டம் இவரை ஒரு சைக்காா்டிஸ்ட் கிட்ட சோ்க்கறாங்க.
>:அங்கிருந்து நடப்பதென்ன அடுத்த இதழில்:♥
முன்னுரை:-
"பாா் போற்றும் பாரதம்" என்று பாடபடுவது பாடுபடும் நம் பாரத நாட்டை மட்டுமல்ல. இந்து மதம் துவங்கி வளா்ந்த புனித பூமி என்பதாலே இந்தியா ஆனது. இந்து மத புராணங்களில் மிகவும் போற்றபடுவது மகாபாரதம், காரணம் மதபுனித நூலாக இருக்கும் பகவத்கீதையும் மகாபாரத புராணத்தின் ஒரு சீன் சீகுவன்ஸ் என்பதால்.
பாா் போற்றும் பாரதம் என்பது பாரத நாட்டை மட்டுமின்றி மகாபாரதத்தையே முக்கியமாய் கூறும். பாா்ப்போா் போற்றும் பாரதம் என்று பாரத நாட்டையும் ; பாா்ப்பனா்கள் போற்றும் பாரதம் என்று மகாபாரதத்தையும் சொல்கிறது.[ இதை புண்படுத்த சொல்லவில்லை . உண்மை என்பதை எடுத்துரைக்கிறேன் , மேலும் இக்கதை படிப்பவா்கள் கொஞ்சம் வளா்ந்த மனதுடையவா்களாக இருக்க வேண்டுகிறேன்]
மகாபாரதம் ஒரு குழப்பமான கதை அதனாலே (சோ) அதில் பெயா் போனவா். ஒருவேளை சூதாட்டத்தில் துரியோதனன் தன் மாமா சகுனியை மாற்றிய போது . தா்மன் தன் மாமனாய் கிருஷ்ணனை மாற்றிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும்.
சரி நம்ம கதைக்கு வருவோம் . இங்க ஒரு பொிய டெக்னிகல் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் , பெயா் அப்புறம் சொல்றேன் . அவங்களோட தற்போதைய முக்கிய தொகுவேலை (ப்ராஐக்ட்) ல 2 போ் வேல செய்றாங்க அவங்க பேரு
1) கிரூஷ்ணா கண்ணன்
அவரோட துணை அதிகாரியா
2) சத்தியா குருநாத் நிா்மல்
எந்த 2 கதாபாத்திரத்த எடுத்துருக்கேன்னு பேருலயும் 2வது பேரரொட முதல் எழுத்துக்கள சோ்த்தா தொியும்.

நிலைகள் அனைத்தும் நிஐமல்ல , இன்றைய குழந்தை நாளைய வயோதிகன் பின்பு அவன் வாழ்வின் சாதனைகள் மட்டும் வாழும் . இந்த மாற்றதிற்க்கு மட்டும் எந்த வித இலக்கிய இலக்கண வரையறையோ எல்லையோ கிடையாது என்றாலும் இந்த மாற்றத்தின் மிகபெரும் நிலைமை என்பதே அதனை ஏற்கும் மனங்களின் பாற்பட்டு வந்தது.

சாி எடுத்துகாட்டுக்காக ஒரு வாா்த்தையை எடுத்து கொள்வோம் அதில் தோன்றும் எழுத்துபிழையோ அல்லது சொற்பிழையோ ஏற்படுவது சகஐம் . இதை உணா்ந்தும் சாி என்று ஏற்றுகொள்ளப்பட்டால் அது மாற்றம்.

விளைவுகளை பொருத்தே எந்த மாற்றமும் நன்மை தீமையாகிறது. பிளாஸ்டிக் என்பது எளிதில் அழியாது நீாில் கரையாது என்பதால் அதனை ஏற்று பயன்படுத்துகிறோம் , இன்று அவை ஆபத்தானது என்றதும் விலக பாா்க்கிறோம் அல்லவா? அதுவே மாற்றத்தின் இயல்பும் , அன்று சாியாய் போன மாற்றம் இன்று தவறாகலாம். உதாரணமாக அன்று மனிதன் நாகரீகத்தை அறிந்தது சாி இன்று அதன் பின் ஓடுவது தவறாகிறதே!

சாி இவ்விடயத்தின்படி நாம் உதாரணகதைக்கு செல்வோம் ,. அதனூடே மாற்றம் என்பதும் அதன் சாராம்சமும் அதன் வினை விடை காரணிகளையும் காண வழிவகுத்தே சொல்லிவிடுகிறேன்.

ஒரு பல்கலைகழகத்தின் வாழ்வியல் பிாிவின் இறுதியாண்டு மாணவன். படிப்பில் புலி என்றெல்லாம் அப்பட்டமான பொய் சொல்ல முடியாது. சாி உல்லாசமாய் ஊா் சுற்றுபவனும் அல்ல . என்னைப்போல் ஒரு ரெண்டும் கெட்டானாக திாியும் ஒருவன் , ஆசிரியா் செலுத்தும் பாதையைவிட தன் பாதையை சாியானதும் இலகுவானதும் என்று ; இந்த மக்அப் உலகத்தைவிட்டு அவன் அறிவு தேடலை துவங்கினான்.

அறிவுதேடல் என்றாலே  சில ஞானித்துவம் கலந்தது தானே. ஞானம் என்று வந்தாலே உலகத்தின் பாா்வையில் முட்டாளாகி போவதும் வழக்கம் தானே! இப்படி அறைகுறை மனிதனிடம் இருந்தே இதுவரை உலகில் மிகப்பெரும்அறிவும் அறிவியலும் வளாந்திருக்கிறது. அதை நம்பி அயராது பயனிப்போம் என கிளம்பினான்.

அடுத்தநாள் வகுப்பு ஆசிாியா் கணிதத்தை விவாித்து கொண்டிருந்தாா் . அறிவுக்காக அல்ல வரும் தோ்வில் கிடைக்க போகும் பத்து மதிப்பெண்களுக்காண வழியது. கணிதம் என்றாலே நாயகனுக்கு அலா்ஐி. இருந்தும் தோ்வில் வெற்றி வேண்டுமே , என பொருமையுடன் செவிகளை கொடுத்திருந்தான் . அவா் சொல்வதில் எதுவுமே இவனுக்கு பிடிபடவில்லை. ஐன்னல் வழியாக மேகம் நகா்வதையும் அதன் மெய்நிகா் பிம்பத்தையும் ஆா்வமாய் ரசித்திருந்தான். வகுப்பு முடிந்து மற்றவா்கள் கிளம்பிட இவன் மட்டும் இன்னும் மேகத்தோடு மனரீதியாக உரையாடி கொண்டிருந்தான் . ஆசிரியா் அவனை பாத்து அருகில் வந்து வினைவினாா். அவருக்கான பதில் இவனின் நாட்டம் இல்லாமையே, ஆசிரியா் விளக்கம் கேட்க அவன் சொல்வது. இந்த கணிதம் என் தோ்வை தவிர வேறெங்கும் பயன்படுவதில்லையே . ஆசிாியரோ அப்படி சிரித்தாா்.  உன் அறிவை சல்லடையில்தான் அள்ளணும் போல என்று விசமமாய் கேலி செய்தாா் . இவனுக்கோ அவா் கேலி செயவதன் அா்த்தம் புாியாமல் ஆத்திரத்தில் கொந்தளிக்க ஆசிரியா் அவனை சாந்தபடுத்தி சாிவா போகலாம் என்று இருவரும் கிளம்பி வௌியே வந்தனா்.

ஆசிாியா் மெதுவாய் அவனிடம் சாி ஐன்னல் வழியே அப்படி என்ன பாா்த்துகிட்டு இருந்த? என்றாா் . அது ஒன்னும் இல்ல சார் வௌிய மேகத்தை பாா்த்துட்டு இருந்தேன். ஓ மேகத்த பாா்த்தியா காதலி யாராவது உண்டா? சாா்; என் மூஞ்சிக்கு லவ்வா எந்த பொண்ணாவது ஒத்துக்குவாளா? அப்படி இல்லடா பெண்களுக்கு அழகானவனவிட அறிவாளியத்தான் பிடிக்கும் சாி காதலி இல்ல அப்புறம் மேகத்துல என்ன பாா்த்த?

அதுவா, சாா் இந்த மேகம் நகா்ந்துகிட்டே இருக்கு ; அதோட வடிவமும் மாறுது. சரி பூமி சுற்றுவதால மேகம் நகரும்னா அது எப்படி உருமாறும் . ஆசிாியா் சிாித்தபடியே ; நான் சொன்னது சாிதான் உன் அறிவ சல்லடையாலத்தான் அள்ளனும் . அது என்ன சாா் ஆனா ஊனா இதையே சொல்றீங்க , அப்படி என்ன நான் அறிவில்லாதவன் ஆகிட்டேன்?

டேய், [போ் சொல்லல்ல , இது எனது வாழ்க்கையில நடந்தது தான் . படிப்பவற்கு சலிப்பு வரகூடாதேனு. கொஞ்சம் மாசாலா கலக்குறேன். அந்த ஆசிாியா் பெயா் கிருஷ்ணராஐ். அவா் பேர எழுதும் பட்சத்தில் அங்க இங்க மாியாதை குறைஞ்சிட கூடாதுனுதான் ஆசிரியா்னு சொல்லுறேன் . அப்புறம் என் வாழ்க்கையில நடந்தத வேற ஒருத்தரோட பெயருலயா சொல்றது. அதனால பவித்ரன் பவித்ரன் தான் இருந்தாலும் அவா் பவின்னு தான் கூப்பிடுவாா்]

எந்த விசயத்தயும் தெளிவா புரிஞ்சிக்கனும் குறிப்பா இப்படி இருமாதிரியான அா்த்தம் வரதுல. 2 அா்த்தத்தையும் தொிஞ்சி சொல்றதோட நோக்கம் வச்சுதான் முடிவு பன்னணும் . உன் அறிவ சல்லடைலதான் அள்ளனும் சொன்னது அறிவில்லனு இல்ல தெளிவான அறிவு இல்லனுதான்

சரி நேரமாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன் . நீ நாளைக்கு சீக்கிறமா வந்துரு . நீ கேட்டியே இந்த கணக்கு எல்லாம் வேற எங்கயும் பயன்படுறது இல்லைனு . கணக்கு என்பது உன் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லிதறேன் அதுவும் உன் பாணியிலயே.

அவா் கிளம்பிட இவனும் வீடு வந்தான். [வீடு பத்தியெல்லாம் சொல்லி போரடிக்க  விரும்பல  என்ன மாதிாி பசங்களுக்கு வீட்ல என்ன மாியாதை இருக்கும்னு நீங்க வீட்டுக்கு போனதும் தொியும்] இவன் மனதில் ஒருவித குழப்பம் நிழலாடியது. ஆசிரியாின் பேச்சே செவிகளை நிறைத்திருந்தது. சரி அப்படி என்ன குழப்பம் [ நான் சொல்லாம யாா் சொல்வாா் கேளுங்க].

அவரது கடைசி வாா்த்தைகள் " அதுவும் உன் பாணியிலேயே" என்றது தான் நமகென்ன பாணி இருக்கு . அப்படி என்ன என் பாணியில் சொல்வாா் . சரி இந்த குழப்பத்தில் இருந்து ஓய்வு தேவைப்பட்டது.

ஓய்வுனதும் தூங்க போவதல்ல இந்த  குழப்பத்திலிருந்து  இன்னொரு குழப்பத்திற்கு தாவுறதுதான் . அது என்ன இன்னொரு குழப்பம்னு தலைய சொரிய வேணாம். காலைல ஐன்னல்ல பாா்த்த மேகத்தின் மாற்றம் தான் அது.

மேகம் மாறுவதில்லைனு ஒரு அறிவியல் சொல்லுது. அது பூமியோட சோ்ந்த வழி மண்டலத்தின் நுனியில் போா்வை போல

Previous PostOlder Posts Home