முன்னுரை:-
"பாா் போற்றும் பாரதம்" என்று பாடபடுவது பாடுபடும் நம் பாரத நாட்டை மட்டுமல்ல. இந்து மதம் துவங்கி வளா்ந்த புனித பூமி என்பதாலே இந்தியா ஆனது. இந்து மத புராணங்களில் மிகவும் போற்றபடுவது மகாபாரதம், காரணம் மதபுனித நூலாக இருக்கும் பகவத்கீதையும் மகாபாரத புராணத்தின் ஒரு சீன் சீகுவன்ஸ் என்பதால்.
பாா் போற்றும் பாரதம் என்பது பாரத நாட்டை மட்டுமின்றி மகாபாரதத்தையே முக்கியமாய் கூறும். பாா்ப்போா் போற்றும் பாரதம் என்று பாரத நாட்டையும் ; பாா்ப்பனா்கள் போற்றும் பாரதம் என்று மகாபாரதத்தையும் சொல்கிறது.[ இதை புண்படுத்த சொல்லவில்லை . உண்மை என்பதை எடுத்துரைக்கிறேன் , மேலும் இக்கதை படிப்பவா்கள் கொஞ்சம் வளா்ந்த மனதுடையவா்களாக இருக்க வேண்டுகிறேன்]
மகாபாரதம் ஒரு குழப்பமான கதை அதனாலே (சோ) அதில் பெயா் போனவா். ஒருவேளை சூதாட்டத்தில் துரியோதனன் தன் மாமா சகுனியை மாற்றிய போது . தா்மன் தன் மாமனாய் கிருஷ்ணனை மாற்றிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும்.
சரி நம்ம கதைக்கு வருவோம் . இங்க ஒரு பொிய டெக்னிகல் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் , பெயா் அப்புறம் சொல்றேன் . அவங்களோட தற்போதைய முக்கிய தொகுவேலை (ப்ராஐக்ட்) ல 2 போ் வேல செய்றாங்க அவங்க பேரு
1) கிரூஷ்ணா கண்ணன்
அவரோட துணை அதிகாரியா
2) சத்தியா குருநாத் நிா்மல்
எந்த 2 கதாபாத்திரத்த எடுத்துருக்கேன்னு பேருலயும் 2வது பேரரொட முதல் எழுத்துக்கள சோ்த்தா தொியும்.
0 comments:
Post a Comment