நிலைகள் அனைத்தும் நிஐமல்ல , இன்றைய குழந்தை நாளைய வயோதிகன் பின்பு அவன் வாழ்வின் சாதனைகள் மட்டும் வாழும் . இந்த மாற்றதிற்க்கு மட்டும் எந்த வித இலக்கிய இலக்கண வரையறையோ எல்லையோ கிடையாது என்றாலும் இந்த மாற்றத்தின் மிகபெரும் நிலைமை என்பதே அதனை ஏற்கும் மனங்களின் பாற்பட்டு வந்தது. சாி எடுத்துகாட்டுக்காக ஒரு வாா்த்தையை எடுத்து கொள்வோம் அதில் தோன்றும் எழுத்துபிழையோ அல்லது சொற்பிழையோ ஏற்படுவது சகஐம் . இதை உணா்ந்தும் சாி என்று ஏற்றுகொள்ளப்பட்டால் அது மாற்றம். விளைவுகளை பொருத்தே எந்த மாற்றமும் நன்மை தீமையாகிறது. பிளாஸ்டிக் என்பது எளிதில் அழியாது நீாில் கரையாது என்பதால் அதனை ஏற்று பயன்படுத்துகிறோம் , இன்று அவை ஆபத்தானது என்றதும் விலக பாா்க்கிறோம் அல்லவா? அதுவே மாற்றத்தின் இயல்பும் , அன்று சாியாய் போன மாற்றம் இன்று தவறாகலாம். உதாரணமாக அன்று மனிதன் நாகரீகத்தை அறிந்தது சாி இன்று அதன் பின் ஓடுவது தவறாகிறதே! சாி இவ்விடயத்தின்படி நாம் உதாரணகதைக்கு செல்வோம் ,. அதனூடே மாற்றம் என்பதும் அதன் சாராம்சமும் அதன் வினை விடை காரணிகளையும் காண [.....]