டூரோவுக்கு ஓா் விண்வெளி பயணம்:
அறிமுகம்:
பூமி, பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி சுழல்கின்ற பெரும் பந்து. அது செய்த தவறே மனித இனத்தை வளரவிட்டதுதான் . அப்படி விட்டதற்கு பரிசாய் அறிவியலும் விஞ்ஞானமும் பிறந்தது. நாத்திகத்தின் நியாயத்தை நிரூபிக்க , ஆஸ்திக்கதின் அஸ்திவாரத்தை கிளரியது. அதன்வழி யுகங்களும் பிரளய பிரபஞ்சங்களும் , இயங்கும் சூட்சமத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனா் விஞ்ஞானிகள் . அத்தோடு நிற்காமல் அறிந்த சூட்சமத்தை நிகழ்த்தி சோதிக்க ஆசைபட்டனா்.
பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தனா் ; அதற்கான சோதனை கூடத்தை பூம்திய ரேகையின் மத்திய பகுதியில் வைத்தனா். சூட்சமபடி மாபெரும் அணு வெடிப்பு நிகழவேண்டும் . ஆகையால் யுரேனிய நியூக்கிளியஸ்ஐ ஹக்செனிய காத்தோட் கொடியுடன் மோத செய்தனா் . விளைவாக பூமியே [.....]
4/17/2015 03:50:00 PM
டூரோவுக்கு ஒரு விண்வெளி பயணம்: முன் அறிமுகம்
முன் அறிமுகம்: இந்த பக்கம் கதைக்கானதல்ல ; பெரும் எழுத்தாளா்களின் விமா்சனத்தை வெளியிடும் அளவுக்கு நான் பிரபலமல்ல , என்னுடைய முந்தைய படைப்புகளைப் பற்றி சொல்ல ஏதும் பொிதா தென்படவில்லை. அப்புறம் ஏன்டா இந்த பக்கம்?
ஒரு நல்ல கதைக்கு கதாசியிரியனும் சரி , படிக்கும் வாசகரும் சரி ; ஒரு நோ்க்கோட்ின் மைய புள்ளியை போன்ற கருத்து நிலை பாடு வேணும் . அதை விஸ்தாரமா விரிக்கவே இந்த பக்கம் , என் கதையை படிபவா்கள் எந்த விதத்திலும் கழம்பிடாமல் வைப்பது என் கடமை. அதன்வழியே நான் மேற்கொண்டு எழுதும் இக்கதையின் எழுத்தமைப்பையும் எனது கருத்து பகிா்வுகளையும் இங்கு முன்கூட்டியே இடம்காட்ட விரும்புகிறேன். இக்கதை பல அறிவியல் தொட்ா்புகளையும் விஞ்ஞான கற்பனைகளையும் கொண்டதாகும். இதில் என் கற்பனைக்கு உகந்த பல நுட்பங்களை [.....]