Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
உயிா்கள் அணைத்தும் அமைப்புடையவை அதன்சாரம் என்னவோ வேறாகலாம் . ஆனால் கட்டுமான உட்கரு ஒன்றுதான் ; அதுவே மரபணு.
மனிதன் மறிக்கலாம் , உயிர்கள் பிரியலாம் மரபணு மறிப்பதில்லை அந்த மரபணுக்களின் சில சங்கதிகளை பற்றிய கட்டுரைதான் இது.
மரபணு என்பது டி.என்.ஏ என்னும் மூலகூறின் ஒரு தொகுப்பமைபே. நம் முன்னோா்கள் சொல்லிய ,ஏன் சமீபத்தில் கூட பலா் பேசி கேட்டிருப்பீா்கள்."எல்லாம் தலையில எழுதினபடி நடக்குதுனு" . அது நம்ம தலையில் இல்ல டி.என்.ஏ வின் இடையில் உள்ள நியூக்ளியோடைடுகளில் இருக்கு விதி.
ேஐம்ஸ் வாட்சன் & ப்ரான்சிஸ் கிரிக் என்ற அறிவியலாளா்கள் தான் இந்த நியூக்ளியோடைடு அமைப்பினை கண்டறிந்து வகைபடுத்தினா்.
லூயிஸ் பாஸ்டா்; "உயிா்கள் ஒரு பரிமாண வளா்ச்சியின்போது வேதிவினைகள் சரிவர நிறைவேறுவதாலே தோன்றுகிறது "என்றாா் இதை அப்சொலூட் (absolute) கொள்கையானது.
இதையே ஆல்பா்ட் ஐன்ஸ்டின் ஏற்றுகொள்ள தகாதது என்றாா்.
நியூக்ளியோடைடு வாிசை என்பது நான்கே எழுத்துக்கள் தான் ; அதன் வாிசை அடிபடையிலேயே உயிா்களும் அதன் குணங்களும் வேறுபடுகின்றன. எப்படி ஏழு ஸ்வரங்களில் இருந்து பல்வேறு ராக தாளங்கள் வந்ததோ அப்படி.  ATCG என்ற நான்கு எழுத்துக்கள்.
A- adinine  அடினைன்
T- timine  தைமைன்
C- cyclocine சைக்ளோசைன்
G- guanine குவானைன்
இப்படி ஒரு கண்டுபிடிப்பில் தான் ெஐனிடிக்ஸ் என்ற ஒரு துறை வளர ஆரம்பித்தது.
ஒரு மரபணு தொகுப்பை ஐீனோம் என்றாா்கள்:-
1- ஐீனோம= 100,000 ஐீன்களை கொண்டது .்
ஒரு மரபுதொடா் சங்கிலியை குறிப்பிட்ட இடத்தில் அறுத்து; அதற்கு பதிலாக வேறோரு மரபு சங்கிலியை சோ்பதில் துவங்கி ,  புதிய உயிரை உருவாக்கும் வரை சென்றுள்ளது.
இப்படி அறுப்பதற்கும் இணைப்பதற்கும் சில நுண்ணுயிரிகள் தேவைபட்டன.
Enzymes ; குறிபிட்ட இடத்தில் அறுக்க
Restriction nucleases ; வெட்டி பிரித்திட
Ligases ; சோ்க்க
இதுக்கு மேல அதனுடைய கணக்கை சொன்ன கூடவே க்ரோசின் மாத்திரையும் அனுப்ப வேண்டிருக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் .
மேலும் அறிந்து கொள்ள விரும்புவோா் , மரபணுக்களும் செயல்பாடுகளும் என்ற புத்தகத்தை படித்து தொிந்து கொள்ளலாம் ஆசிரியா் டி.ஆா். பாலகிருஷ்ணன்.

இன்றைய நிலையில்
இணையத்தில் பெண்கள்
நிலையை அறிய FB யில்
ஒரு fakeid ஒப்பன்
செய்தேன்.அதில் ஏற்பட்ட
அனுபவங்களை பகிரவே இந்த
பதிவு.முதலில் ஆரம்பித்து 1
வாரத்தில் வந்த friend request 959!!!
அடுத்து ஒருமுறை லாக்இன்
செய்து Close
செய்து பிறகு ஓப்பன்
செய்தால் 200 hi msg.
எந்த ரிப்ளேயும் தராமல்
இருந்தே இப்படி. அதிலும்
சிலரின் முதல் Msg unga ph no plz?
எப்படி இதை எளிதாக கேட்க
முடிகிறது.இணைத்திற்கு வரும்
பெண்ணிடம்
இவ்வளவு ஈசியாக கேட்கும்
பலர்.தன் உடன் 3 வருடம் படித்த
பெண்ணிடம்
இப்படி கேட்ருபாங்களா????
இன்னும் சிலர் reply வராமல்
இருந்தால் “yean di msg pana matra”
என்று ஒருமையில் பேசும்
நிலையும் இருக்கிறது.
அதிலும் புரோபைல் picture
வைத்தவுடன் வந்த comments like
தன் நெருங்கிய நண்பன் செய்த
சாதனைக்கு கூட
இவ்ளோ வந்திருக்காது.
அப்படி என்ன இருக்கிறது எதிர்
பாலினம்
மீது ஒரு ஈர்ப்பு அனைவருக்கும்
இருப்பது சகஜமே.ஆனால்
இப்படி யார் எவர் என
தெரியாமல் இருக்கும்
போது இப்படி செய்வது சரியாகுமா??
ஏன் இதை சொல்கிறேன்
என்றால் சிலர் தங்கள் ****
போட்டோ எடுத்து இது நல்லாயிருக்கா என
அனுப்பினார்கள்.இணையத்தில்
பல நல்ல
நண்பர்கள்,உதவிகள்,ஊக்குவிப்புகள்
என நிறைய நல்ல விசயங்கள்
இருக்கிறது.இப்படி பட்ட
சிலரில் செயல்களால் இணைய
ஆண்களை பொதுவாக குற்றம்
சொல்கின்றனர்.இப்படிபட்ட
நிலையிலும் இணையத்தில்
சாதிக்கும் நண்பர்கள்
இருக்கதான்
செய்கிறார்கள்.இணையம்
என்னும் இரு பக்கம் கூராண
கத்தியை சரியாக
பயன்படுத்துவோம். நட்புடன்
இருப்போம். இது என்
அனுபவமே இது யாரையும்
குறிப்பிடுவது அல்ல.ஏதேனும்
தவறாக இருந்தால்
இப்பொது sorrry.
சண்டைக்குலாம் வர வேண்டாம

சுஜாதாவின்
பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப்
படிக்கவும் !!!)
1. ஒன்றின் மேல்
நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு,
வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை
இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக்
கேள்வி கேட்டு இப்போது
தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும்
வேலை சொல்வது பல சமயங்களில்
கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு அவர்கள்
சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்
கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய்
நூறு கிராம் காப்பி பவுடர் (அ)
ரேஷன் கார்டு புதுப்பித்தல்
இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..
3. மூன்று மணிக்குத் துவங்கும்
மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ்
கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய்
சொல்வதற்கு ரொம்ப ஞாபக
சக்தி வேண்டும். இந்த
உபத்திரவத்துக்கு உண்மையைச்
சொல்லி விடுவது சுலபம்.
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப்
போல் மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு
நாளைக்குப்
பொது விஷயங்களைப் படியுங்கள்.
பொது விஷயங்கள் என்றால் கதை,
சினிமா, காதல் இல்லாதவை.
உதாரணம் – யோக்கியமான
செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள்
அல்லது லைப்ரரியிருந்து ஒரு
புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப்
பாருங்கள். சொந்தமாக உங்கள்
உழைப்பில், முயற்சியில்,
யோக்கியமாக,
மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த
முறை அப்பாவிடம் ஆயிரம்
ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார்
கேட்கும் முன்.
6. இந்தத் தகவல்களைப் படிக்கும்
நிலைமை பெற்ற நீங்கள் இந்திய
சனத்தொகையின்
மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில்
ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக
அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம்
ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான
ஞாயிறன்று என்ன செய்தாலும்
காதல் பிஸினஸ் வேண்டாம்.
காதலுக்கு ரொம்பச் செலவாகும்.
மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ
அது. பொய் நிறையச் சொல்ல
வேண்டும். வினோதமான
இடங்களில் காத்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான்
உங்களுக்கு முக்கியம். குறிப்பு:
பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும்,
அவர்களுக்கு கர்சீப் முதலியன
ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும்,உபத்திரமில்லாத
கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.
8.எட்டு முறை மைதானத்தைச்
சுற்றி ஓடினால் எந்தச்
சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும்.
ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச்
சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ
தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள்..
எதையாவது வீசி எறியுங்கள்..
உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர்
ஆரோக்கியமான வடிகால் தேவை.
ராத்திரி சரியாக தூக்கம் வரும்.
கன்னா பின்னா எண்ணங்கள்
தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக
இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள்
வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்
போனால்
ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம்
அல்லது புத்தகம் படிக்கல

10. படுக்கப் போகும் முன்
பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா,
அண்ணன்,
தங்கை யாருடனாவது பேசவும்
(பேசுவது என்று சொன்னவுடன்
காதலியுடன் என்று நினைக்க
வேண்டாம், நான்
சொன்னது குடும்பத்தினருடன்
மட்டும்).
எதாவது ஒரு அறுவை ஜோக்
அல்லது காலேஜில் நடந்த
நிகழ்வுகள். சப்ஜெக்ட்
முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம்
ஒன்று என்று முயற்சி செய்து தான்
பாருங்களேன்...

Previous PostOlder Posts Home