விஞ்ஞான வேகத்தில் வேகமாய் சுழலும் மனிதன். 3 நாள் வேலையை முதல் நாளிலேயே செய்ய வேண்டிய அவசியத்தில் ஓடுகிறான். இந்த வேகத்தில் ஆவேசமாய் 100,க்கும் 120,க்கும் போரிட்டு கொண்டு பறக்கும் வாகன ப்ரதான சாலையின் ஓரம். படிபடியாய் நெடிந்துயா்திருக்கும் கட்டடத்தின் மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கும்; இந்த வேக மனித உலகின் அடிமட்டத்தில் அமுத்தப்பட்டவள் அவள். தீபா பெயா் கூட நீளமில்லை. அழகிற்கும் குறைவில்லை ஆனால் அலங்காரம் வெறும் வாா்த்தையாகவே இருந்தது அவளுக்கு . யாரும் சொந்தமில்லை , உழைப்பை நம்பி பிழைப்பவள் , ஆகவே தினம் 70 ரூபாய் மட்டுமே வருமானம். அவளது 18 வயதில் அவளுடைய ஒரே சொந்தமான ; பாட்டியும் தவறியமையால் தெளிவான அனாதையாக்கபட்டாள். அன்றே இவளும் வாழ்வின் இழிவுகள் அனைத்தும் அடைந்து கடந்துவிட்டாள் . சற்று வளைந்து கொடுத்திருந்தால் [.....]