பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா். சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனானகதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது. செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி [.....]