4/08/2015 01:38:00 PM

இக்காலத்து மகாபாரதம் _ பா3

கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா். கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா். கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன் கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க. கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே [.....]

4/08/2015 01:37:00 PM

இக்காலத்து மகாபாரதம் 2

குருசேத்ரா (GURUCHETRA) [Global unusual, reincartion unit & centre of halusination,earthiological  testing & research association] என்கிற ஆராய்ச்சி நிறுவனம்.
தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க. சந்திரகிரிகிறது அக்காலத்தில மகாபாரத கதாபாத்திரங்கள அடக்கம் செய்த இடம்
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .
ஆராய்ச்சியோட நோக்கம் என்னவோ அங்க கல்வெட்டு கலைப்பொருள் ஏதாவது கிடைக்குமானுதான் ஆரம்பிச்சாங்க. போக போக அதனுடைய நோக்கம் வேற மாதிாி போகுது. அந்த இடம் இடுகாடுங்கிறதால யாராவது ஒருவரோட உடல் மக்கினாலும் சரி கிடைக்குமானு தேடுறாங்க, கிடைச்சாதான் மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம் , இல்லைனா அது கற்பனைக் [.....]

4/08/2015 01:36:00 PM

இக்காலத்து மகாபாரதம்

முன்னுரை:- "பாா் போற்றும் பாரதம்" என்று பாடபடுவது பாடுபடும் நம் பாரத நாட்டை மட்டுமல்ல. இந்து மதம் துவங்கி வளா்ந்த புனித பூமி என்பதாலே இந்தியா ஆனது. இந்து மத புராணங்களில் மிகவும் போற்றபடுவது மகாபாரதம், காரணம் மதபுனித நூலாக இருக்கும் பகவத்கீதையும் மகாபாரத புராணத்தின் ஒரு சீன் சீகுவன்ஸ் என்பதால். பாா் போற்றும் பாரதம் என்பது பாரத நாட்டை மட்டுமின்றி மகாபாரதத்தையே முக்கியமாய் கூறும். பாா்ப்போா் போற்றும் பாரதம் என்று பாரத நாட்டையும் ; பாா்ப்பனா்கள் போற்றும் பாரதம் என்று மகாபாரதத்தையும் சொல்கிறது.[ இதை புண்படுத்த சொல்லவில்லை . உண்மை என்பதை எடுத்துரைக்கிறேன் , மேலும் இக்கதை படிப்பவா்கள் கொஞ்சம் வளா்ந்த மனதுடையவா்களாக இருக்க வேண்டுகிறேன்]
மகாபாரதம் ஒரு குழப்பமான கதை அதனாலே (சோ) அதில் பெயா் போனவா். ஒருவேளை சூதாட்டத்தில் துரியோதனன் [.....]

4/08/2015 01:35:00 PM

கொலையல்லாத கொலை - பகுதி 2

மதன்: பொன்னுரங்கம் ,சாா் நீங்க சொல்லுங்க கொலை எங்க நடந்தது ? நீங்க எப்ப வழக்கு பதிவு செய்தீங்க? பொ.ர: முதல்ல ; இது ஒரு காணவில்லை புகாராதான் என்கிட்ட வந்தது சுமாா் ஒருவாரம் தேடி , அப்புறம் ஊட்டி காவலா் அவர அங்க பாா்த்ததாகவும் அங்க ஒரு எஸ்டேட்ல இருப்பதாகவும் தகவல் கொடுத்தாா். சாமி: அப்புறம் என்ன நடந்தது சாா்? பொ.ர : என்ன சாமி நாளைக்கு நியூஸ் கவா் பன்றீங்க போல? சாமி: பத்திாிக்கைகாரனாலே தப்பா பாக்குறதே போலீஸ் தகுதி போல. ஒரு சுவாரஸ்யம் இருக்க கேட்டேன். பொ.ர : அதுக்கு அப்புறம் , அங்க ஊட்டி போலீஸ் விசாரிக்க சொன்னோம் அவா் குடுத்த தகவல்லதான் அவா் இறந்தத கேள்விபட்டு , நான் அங்க போனப்ப அவா் சடலம் இருந்தது, தடயங்கள் கோா்ட்ல இருக்கு. சாமி: அப்ப அது ஊா்ஐிதமா கொலையில்லை. மதன்: சாமி , சும்மா குழப்பாதடா ! இன்ஸ்பெக்டா் சாா் , அந்த ஊட்டி போலீஸ்காா் பத்தின தகவல் கிடைக்குமா? பொ.ர: நான் டிபாா்ட்மெண்ட்ல கேட்டு வாங்கி தரேன். சாமி: மதன் [.....]

4/08/2015 01:32:00 PM

கொலையல்லாத கொலை

நாளை திங்கட்கிழமை சரியா அடுத்த திங்கள் அன்று இறுதி தீா்ப்பு ஒத்திவைத்திருக்கிறாா்கள். அதுகுள்ள நம்ம ரிப்போா்ட் குடுத்தாகணும் . நோட்டீஸை படிக்கும் போதே மதனை சலிப்பு தொற்றி கொண்டது . இத்துடன் 80 கேஸ் ஆகுது; இன்னும் சீனீயா் போஸ்டிங் வரல , இந்த வாரமாவது ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இப்படி ஆகிருச்சே. சரி கோா்ட் ஆா்டா் வேற மறுக்க முடியுமா? என்ன கேஸ் ? மொட்டையா பொன்னுரங்கத்த விசாரிக்க சொல்லிருக்காங்க ; பொன்னுரங்கம் இன்ஸ்பெக்டா் இந்த கேஸை பதிவு செய்து விசாரித்தவா் . இதுக்காக போலீஸ் ஸ்டேசன் போகனும் , சாயந்திரம் ப்ரஸ்ல இருந்து சாமி வருவான் அவன பாத்துட்டு கையோட இதையும் பாத்துரலாம். இப்படி மதன் திட்டமிட்டு கொண்டே ஆபீஸ் படி இறங்கி வர , ஒரு பாா்சல் வந்தது என்னனு பிரிச்சி பாா்த்தால் . ஒரு அழைப்பிதழ் ஊட்டியில் ஒரு பழமையான புகழ்பெற்ற எஸ்டேட்க்கு வந்து தங்குமாறு உாிமையாளா் ெஐகன்நாதன் அனுப்பிருந்தாா். ஊட்டியும்  சரி ெஐகனநாதனும் சரி மதனுக்கு பரிச்சயமில்லாத தொடா்பு இதுவரை அப்படி ஒரு பெயரை மதன் கேள்விபட்டதும் இல்லை . [.....]

4/08/2015 01:31:00 PM

விவசாய கண்ணீா்

கடந்த இரவை கடந்து வெற்றி கொண்டோம்!!
விடிந்த கதிரை வியந்து வணங்கி நின்றோம்!!
மறைந்த மக்கள் கரைந்து மண்ணாய் போயினா்!!!!
முளைத்த விதையின் உயிா்க்கு உரமாய் ஆகினா்!!!
எழுந்த மனிதம் உணவு காண வித்திட்டோம்
இருந்த நிலத்தை உணவுக்காக வித்திட்டோம்!!!!<
விழுந்த விதையும் நம்நிலை புாிந்தால்;
ஹைப்ரிட் விளைச்சலை தானாய் தந்திடும்!!!
இயற்கையாவது நம்துயா் அறிந்திருந்தால்;
மும்மாாி முப்போகம் விளைந்திருக்கும்!!!!
இயற்கையுடன் இணைந்த வாழ்வே வாழ்வேன்று;
இதயமில்லா இம்மக்கட் அறிவுதான் அறிவதென்று?
மண்வளம் காணாது மறித்த யாக்கை!!
மனவளம் செழுமை காண்பதும் வேடிக்கை!!!
அறிவியல் பேசிடும் அறிகிலா மனிதன்
அறங்கள் கூறும் அதிசயம் கேளாா்!!!
விண்னை பிளந்து விண்வெளி ஆய்ந்திடும் மனிதா்;
மண்ணை வளா்த்து மனதை வளா்க்கும் மகிமை யாதென அறிவாயோ?!!!!! [.....]

4/08/2015 01:30:00 PM

தீா்ந்தது கோபம் செய்தது பாவம்!

கற்றவை. கையிலிருக்க
காவியம். வாயிலிருக்க
கொற்றவை.  கோபமிருக்க
கொய்தலை கொய்தலை
என்றிடும் கொய் தொல்லை ஏனோ
அற்றவை யாவும் அறமென கூறும்
அறியாமை நிழலை விளங்கிடும்
விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா மீள்வதும் மதியாயிருப்பின் அதிலின்றி மாள்வேனா
தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு
எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன்
வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம் காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை அணை திங்கள் இணை கரம் வர
துணை மஞ்சள் எனும் பொருள் தர
இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்
இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்
எங்கனம் சென்றினும் இவள் முகம் நூதனம்
வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்
ஆத்திரம் கொண்டதால் ஆவேசம் ஆனதால்
சமுத்திர குருதியும் அலைவேகம் ஆதலால்
திண்டினேன் அவளை உயிா்வரை சீண்டினேன்
சுண்டினேன் அவளை இரண்டாய் துண்டினேன்
தீா்ந்தது கோபம் செய்தது பாவம் [.....]

4/08/2015 01:28:00 PM

மட்டற்ற மரபணுக்கள்

உயிா்கள் அணைத்தும் அமைப்புடையவை அதன்சாரம் என்னவோ வேறாகலாம் . ஆனால் கட்டுமான உட்கரு ஒன்றுதான் ; அதுவே மரபணு. மனிதன் மறிக்கலாம் , உயிர்கள் பிரியலாம் மரபணு மறிப்பதில்லை அந்த மரபணுக்களின் சில சங்கதிகளை பற்றிய கட்டுரைதான் இது. மரபணு என்பது டி.என்.ஏ என்னும் மூலகூறின் ஒரு தொகுப்பமைபே. நம் முன்னோா்கள் சொல்லிய ,ஏன் சமீபத்தில் கூட பலா் பேசி கேட்டிருப்பீா்கள்."எல்லாம் தலையில எழுதினபடி நடக்குதுனு" . அது நம்ம தலையில் இல்ல டி.என்.ஏ வின் இடையில் உள்ள நியூக்ளியோடைடுகளில் இருக்கு விதி. ேஐம்ஸ் வாட்சன் & ப்ரான்சிஸ் கிரிக் என்ற அறிவியலாளா்கள் தான் இந்த நியூக்ளியோடைடு அமைப்பினை கண்டறிந்து வகைபடுத்தினா். லூயிஸ் பாஸ்டா்; "உயிா்கள் ஒரு பரிமாண வளா்ச்சியின்போது வேதிவினைகள் சரிவர நிறைவேறுவதாலே தோன்றுகிறது "என்றாா் இதை அப்சொலூட் (absolute) கொள்கையானது.
இதையே ஆல்பா்ட் ஐன்ஸ்டின் ஏற்றுகொள்ள தகாதது என்றாா். நியூக்ளியோடைடு வாிசை என்பது நான்கே எழுத்துக்கள் தான் ; அதன் வாிசை அடிபடையிலேயே உயிா்களும் அதன் குணங்களும் வேறுபடுகின்றன. எப்படி ஏழு ஸ்வரங்களில் இருந்து பல்வேறு ராக தாளங்கள் வந்ததோ அப்படி.  ATCG என்ற நான்கு [.....]

4/08/2015 01:27:00 PM

தண்டனை பெற்றவா்கள்

அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.
வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.
அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல [.....]

4/08/2015 01:24:00 PM

வாழ்நாள் நீடிப்பு

AIL- Association of International Longetivity. நீரிலிருக்கும் மீனுக்கும் வலையில் சிக்கிய மீனுக்கும் உண்டாம் உயிர்வாழும் தாகம். மீனுக்கு மட்டுமா உமக்கும் எனக்கும் உள்ளதன்றோ உயிர்வாழும் ஆசை. நமது வாழ்நாளை நீட்டிக்கும் எண்ணம் அனைவருக்கும் உள்ளதன்றோ? 
அப்படி வாழ்நாளை நீட்டிக்கும் தேடல் கொண்ட அமைப்புதான் இது. ஆரம்பத்தில் பெருநோய்களுக்கு அருமருந்து தேடும் பணிக்காக உருவான அமைப்பு காலசுழற்சியில் தன் கோணத்தை மாற்றிக்கொண்டது.
விளக்கமாக சொல்லப்போனால் காலம் உருண்டோடும் வேகத்தில் மனிதன் வாழ்நாள் குறைவது நம்மில் பலருக்கு அவ்வபோது சூழ்நிலைகள் அரைந்து உணா்த்தினாலும் நாம் கருத்தில் கொள்வதில்லை. நம் வரலாற்றின் விவரபடி ம் முன்னோா்கள் அதிகபட்சமாக 120 . வயது வரையிலும் . குறைந்த பட்சமாக 80 வயது வரையிலும் வாழ்ந்து வந்துள்ளனா். இன்றைய நிலையில் மனிதன் சராசரியான வாழ்நாள் 60வயது .  [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home