விவசாய கண்ணீா்

கடந்த இரவை கடந்து வெற்றி கொண்டோம்!!
விடிந்த கதிரை வியந்து வணங்கி நின்றோம்!!

மறைந்த மக்கள் கரைந்து மண்ணாய் போயினா்!!!!
முளைத்த விதையின் உயிா்க்கு உரமாய் ஆகினா்!!!

எழுந்த மனிதம் உணவு காண வித்திட்டோம்
இருந்த நிலத்தை உணவுக்காக வித்திட்டோம்!!!!<

விழுந்த விதையும் நம்நிலை புாிந்தால்;
ஹைப்ரிட் விளைச்சலை தானாய் தந்திடும்!!!

இயற்கையாவது நம்துயா் அறிந்திருந்தால்;
மும்மாாி முப்போகம் விளைந்திருக்கும்!!!!

இயற்கையுடன் இணைந்த வாழ்வே வாழ்வேன்று;
இதயமில்லா இம்மக்கட் அறிவுதான் அறிவதென்று?

மண்வளம் காணாது மறித்த யாக்கை!!
மனவளம் செழுமை காண்பதும் வேடிக்கை!!!

அறிவியல் பேசிடும் அறிகிலா மனிதன்
அறங்கள் கூறும் அதிசயம் கேளாா்!!!

விண்னை பிளந்து விண்வெளி ஆய்ந்திடும் மனிதா்;
மண்ணை வளா்த்து மனதை வளா்க்கும் மகிமை யாதென அறிவாயோ?!!!!!
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment