ஆ காய விமானம்
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பாராசூட்
பற்றி கனவு கண்டவன் மோனாலிஸாவைப்
படைத்த ஓவியன் டாவின்ஸி.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல...
கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
மனித இனத்தின்
வளர்ச்சி பற்றி தொலைநோக்கோடு கனவு காண்பதுதான்
பிரதான வேலை. 13
ஆண்டுகளுக்கு முன்பு கார்கள் பற்றி
சுஜாதா கண்ட பல கனவுகள்
இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.
சுஜாதாவின் இந்தக் கனவுகள் எந்த
அளவுக்கு நனவாகி இருக்கின்றன?
1.செல்ஃப் டயக்னாஸ்டிக்ஸ்
காருக்குள்ளேயே தன்னைத்தானே பரிசோதித்துப்
பார்த்துக்கொள்ளும் டயக்னாஸ்டிக்ஸ்
இருக்கும். அதிலிருந்து ஜி.பி.எஸ்
எனும் செயற்கைக் கோள் வழியாக
ஆட்டோமொபைல்அசோசியேஷன்காரர்களுக்கு செய்தி போய்,
காரில் ஏதாவது கோளாறு வரப்
போகிறது என்றால்,
டிரைவருக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்து விடுவார்களாம்!
விஷயம் சீரியஸ் என்றால், உதவிக்கான
காரையும் அனுப்பி விடுவார்களாம்.
2.டிரைவர் மானிட்டர் சிஸ்டம்
டிரைவர் மானிட்டர் சிஸ்டம் என்பது,
நீங்கள் எத்தனை தடவை ஸ்டீயரிங்கைத்
திருப்புகிறீர்கள்,
அடிக்கடி திருப்புகிறீர்களா, நீங்கள்
களைப்பாக
இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்து இளைப்பாறி களைப்பாறச்
சொல்லுமாம்.
3.ஸ்மார்ட் கார்டு
உங்கள் காருக்கென்று உங்களிடம்
ஒரு 'ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பார்கள்.
அதனால்தான் காரைத் திறக்க முடியும்.
இன்ஜினைக் கிளப்பி சீட்டை உங்கள்
பழக்கத்துக்கு ஏற்ப 'ஜம்’ என்று சீர்
செய்யும். டாக்ஸ் கட்டக் கூடப்
பயன்படுத்தலாம்.
4.ஹைட்ரஜன் கார்
எதிர்காலத்தில் கார்கள் ஆல்கஹாலில்
ஓடலாம் என்கிறார்கள். கேஸ் (Gas) கூட
பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் கார்களும்
வரலாம் - பெட்ரோல் தீர்ந்து போய்விடும்.
5.ஆட்டோமேட்டிக் பிரேக், வைப்பர்
குறுக்கே போகும் பாதசாரிகள், மாடுகள்,
கார்கள் இவைகளையெல்லாம் கார்கள்
தானாகவே கண்டுபிடித்து பிரேக் போடும்.
மழை வந்தால் தானாகவே வைப்பர்
வேலை செய்யும்.
6.பார்க்கிங் சென்ஸார்
பார்க் செய்வதற்கு கஷ்டப்பட
வேண்டியதில்லை.
காரை விட்டு இறங்கியதும், கார்
தானாகவே தன்னை பார்க்
செய்து கொள்ளும்.
7.லேசான கார்கள்
எதிர்கால கார்கள் லேசாக இருக்கும்.
கொஞ்சம் பலமாக ஊதினால் நகரலாம்.
அதெல்லாம் கி.பி.2000-க்குள் வரும்
என்றார்கள். நீங்களும் இருக்கப்
போகிறீர்கள். நானும். பார்க்கலாம்!
0 comments:
Post a Comment