iSTREAM
உ லகில் முதன்முதலாக
ஹென்றி ஃபோர்டு, கார்
தயாரிக்கும் அசெம்பிளி லைனைத்
துவக்கியதில்
இருந்து இன்று வரை 'கார்’ என்ற
வாகனத்தைத் தயாரிக்கும்
அடிப்படை முறை மட்டும்
அப்படியே இருக்கிறது.
இதை முற்றிலும் மாற்றியமைத்து,
கார் தயாரிப்பு என்ற
விஷயத்தை மிக
எளிமையாக்கி இருக்கிறார்
மெக்லாரன் F1 காரை உருவாக்கிய
கார்டான் முரே. அவர்
உருவாக்கியுள்ள
தொழில்நுட்பத்தின் பெயர் ஐ-ஸ்ட்ரீம்
(iStream) . இந்தத் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி கார்களைத்
தயாரித்தால், வழக்கமான கார்
தயாரிப்புக்குத் தேவைப்படும்
தொழிற்சாலை வசதிகளில் 20
சதவிகிதம் போதும். மேலும்,
'மெட்டல் ப்ரெஸ்’ எனப்படும் உலோகத்
தகடை காருக்கு ஏற்ப மாற்றும்
வேலைகள் இதில் தேவை இல்லை.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்
எந்த ஒரு சிறு நிறுவனமும், சிறிய
முதலீட்டில் கார் தயாரிப்பைத்
தொடங்க முடியும்.
ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தில் ஐ-
பேனல்ஸ், ஐ-ஃப்ரேம் (iPanels, iFrame) என
இரண்டு அம்சங்கள் உள்ளன. ஐ-
பேனல்ஸ்
என்பவை கண்ணாடி இழைகள்
அல்லது இயற்கை இழைகளால்
உருவாக்கப்பட்ட காம்போசிட்
(Composite). இவை மிகவும்
ஸ்திரமான, அதிக எடையைத்
தாங்கும் திறன்கொண்டவை. ஐ-
ஃப்ரேம் என்பது லேசர் மூலம்
வெட்டப்பட்ட, கம்ப்யூட்டர் வெல்டிங்
செய்யப்பட்ட, மெல்லிய ஸ்டீல்
குழாய்களால் ஆன ஸ்டீல் ஃப்ரேம்.
ஐ-பேனல்ஸும், ஐ-ஃப்ரேமும்
தயாரானவுடன் இரண்டையும்
இணைப்பது வெகு எளிது.
இரண்டு நிமிடங்களுக்குள் ஐ-
பேனலை ஃப்ரேமுடன் இணைத்து,
பிரத்யேக பசையின் மூலம்
ஒட்டிவிடலாம். இவை இரண்டும்
ஒன்று சேர்ந்தவுடன் நமக்குக்
கிடைப்பது மிகவும் திடமான,
பாதுகாப்பான கட்டுமானம். 1,00,000
ஸ்திர சோதனைகளுக்குப் பின்பும்
சேதமடையாமல் நிற்குமாம், இந்தக்
கட்டுமானம்.
ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தின் மிகப்
பெரிய வசதி என்ன என்றால்,
ஒரு சேஸியை உருவாக்கிவிட்டு,
அதன்மீது எந்தவிதமான
பாடி அமைப்பையும் உருவாக்க
முடியும். 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார்,
இடவசதி நிறைந்த டாக்ஸி,
எடை சுமக்கும் பிக்-அப் டிரக் என
இத்தனை வாகனங்களையும்
ஒரே ஒரு அடிப்படைக்
கட்டுமானத்தை வைத்தே தயாரிக்க
முடியும். மேலும், பெட்ரோல், டீசல்,
ஹைபிரிட், எலெக்ட்ரிக் என
எல்லா வகை வாகனங்களையும்
இதில் தயாரிக்க முடியும்.
ஒரே தொழிற்சாலையில்,
ஒரே அசெம்பிளி லைனை மிகக்
குறுகிய நேரத்தில்
மாற்றியமைத்து, எந்த வகையான
வாகனத்தை வேண்டுமானாலும்
தயாரிக்கலாம். ஐரோப்பிய
நாடுகளில் வாகனங்களைச்
சுதந்திரமாகச் சோதனை செய்யும்
அமைப்பான EuroNCAP,
'கார்களுக்கு வகுத்துள்ள சட்ட
திட்டங்களைப் பூர்த்தி செய்யும்
பாதுகாப்பான கட்டுமானம் இது’
என உறுதி செய்யப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம், ஐ-ஸ்ட்ரீம்
முறையில் ஏற்கனவே மோட்டிவ்.இ
(Motiv.e) என்ற
காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment