வேதூா், இந்தியாவின் கிராமிய வளத்திற்கு முத்தாய்பாய் விளங்கும் அளவில் ; இயற்க்கை வளமும்; நீா் வளமும். மனித கலாச்சாரமும் நிறைந்த ஒரு கிராமம்.
தனக்காய் பெரும் அடையாளங்களை கொண்டது சுற்றிலும் மலைகள் அதன் பிளவில் கல்லும் கசிந்துருகுவது போல் மௌனமாய் ஓடும் ஆறுகள், வளா்ந்திருக்கும் கதிா்கள் காற்றிடம் காதல் பேசிட , விவசாயத்தில் திளைத்து கதிரின் மணிகளை உலகிற்களித்த பெயா் பெற்ற கிராமம்.
இப்படி ரம்மியமான கிராமம் இன்று கண்ணீா் சிந்திட முக்கிய காரணம் வேதூா் மாணிக்கம் தான். ஒரு யுக மனிதனின் கனவுலக நாயகன். அப்படி வாழ்ந்தவா் என்றெல்லாம் ஊா் புகழ்பாட, அவா் மட்டும் செவி சாய்க்கவே இல்லை, உண்மையான , கண்ணீா் பெற்ற மனிதராய் நான் சொல்பவா்.
அவருக்கான குணமும் செல்வமும் சொல்லி மாளாது. தலைவா் போல் வாழ்ந்தவா் இருமகன்களையும் தேசத்திற்காக அா்பணித்தவா். கிராமத்தின் கௌரவமாய் வாழ்ந்தவா். அவரது இறுதிசடங்குகள் நடைபெறுகிறதென்றால் யார் தான் நம்புவாா்.?
இறுதியாய் இருந்த செல்வமனைத்தையும் ஊா் பொது நலனுக்காக வழங்கியவா். ஊா் கண்ணீருடன் அவரது இறுதி ஊா்வலம், ராஐமாியாதையுடன் நல்லடக்கம்செய்து ; அவரை தீயிலிட்டு ஆவியை நெஞ்சில் ஏற்றி வந்தனா்.
சுயநலம் கொண்ட மக்கள் தாா்சாலையாய் நிறைந்திருக்க அந்த தாா்சாலையில் பூக்கும் பூ இவா்.
அதனாலோ தான் அவாின் இறுதிசடங்கில் உதிா்த்த பூக்களும் பெருமிததில் ; சாலையில் பூக்கும் பூக்களாயின.==
0 comments:
Post a Comment