ஷியோமி இந்த செல்போன்
நிறுவனத்தின்
பெயரை அறியாதவர்களே இருக்க
முடியாது என்கிற
அளவிற்கு ஸ்மார்ட்போன் உலகில்
பெயர் வாங்கிய நிறுவனம் தான் இது.
சீனாவை சேர்ந்த இந்த
நிறுவனத்தால் ஆபத்து இருப்பதாக
இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது
. ஃப்ளிப்கார்ட்டில்
ஒன்லி ஆன்லைன் முறையில்
விற்பனை செய்யப்படும் இந்த போன்
விற்பனைக்கு வரும் சில
நொடிகளிலேயே விற்று தீர்ந்த
சாதனையும் இதற்கு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில்
உள்ள வசதிகளை குறைந்த
விலையில் தந்ததால்
இதனை சீனாவின் ஆப்பிள்
என்றனர்.இந்நிலையில் இந்திய
விமானப்படை இந்த சீன நிறுவனம்
மீது புகாரை எழுப்பியுள்ளது. இந்த
நிறுவனம் சீனாவில் உள்ள
சர்வரில் இதன்
வாடிக்கையாளர்களின்
தகவல்களை அவர்கள்
அனுமதியின்றி சேமிப்பதாக இந்த
புகாரில் இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது.
ஷியோமி 1எஸ், எம்ஐ போன்களில்
உள்ள க்ளவுட் வசதி மூலம்
சேகரிக்கப்படும் தகவல்கள்
அனைத்தும் வாடிக்கையாளர்களிம்
சேகரிக்கப்பட்ட தகவல்களை
அனுமதியின்றி வெளியில்
உள்ளவர்களுக்கு விற்றுள்ளதாகவும்
புகார் கூறியுள்ளது.
இதனால் தான் விமானப்படையின்
அதிகாரிகளும், அவரது குடும்ப
உறுப்பினர்களும் இந்த
போனை பயன்படுத்துவதையும்
தவிர்த்துள்ளோம்
என்று கூறியுள்ளனர். இந்திய
பாதுகாப்பில் முக்கிய
பங்கு வகிக்கும்
விமானப்படையே இந்த
எச்சரிக்கையை விடுத்துள்ளது பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment