கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா்.
கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா்.
கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க
கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன்
கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க.
கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே பி ஒரு எக்ஸாமைன் தான். நீங்க சொல்ல கூடாதுனா பிரோஐனம் இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி எனக்கு ஒத்துழைப்பு குடுங்க
கிருஷ்ணா :- இட்ஸ் வெரி சில்லி நீங்க படிச்சவா் தான.
கோகு:- கிருஷ்ணா இத நீங்க சில்லியா நெனைக்கலாம் , ஆனா இதுக்கு உங்கள உட்படுத்த ஒரு காரணம் இருக்கு .
கிருஷ்ணா:- அப்படி என்ன காரணம் இந்த முட்டாள்தனமான ஏற்பாட்டுக்கு இருக்க போவுது?
கோகு:- காரணம் இருக்கு நீங்க பண்ண ஒரு முட்டாள்தனம் ,100% சரியா   பொருந்துறதால
கிருஷ்ணா:- நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல
கோகு :- நீங்க செல்வனூா் போனீங்களா இல்லையா?
கிருஷ்ணா :- ஆமாம் போனேன் அதனால தான் இங்க இருக்கேன்
கோகு:- அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு தொியுமா? உங்க அசிஷ்டெண்ட் நிர்மல் அங்க போனாா் அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?
கிருஷ்ணா:- தெரியாது சாா் என்னச்சு நிா்மல்க்கு
கோகு :- மென்டல் டிப்ரெஷன் அதிகமாகி கோமா ஸ்டேஐ் ல இருக்காரு
கிருஷ்ணா :-  அதுக்கும் என்ன பிறப்புக்கு பின்னால போக சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்.
கோகு :- அது ரகசியம் நேரம் வரும்போது உங்களுக்கே தொியும். இப்போதைக்கு உங்களுக்கு  லோகேஷனல் ஹலூசன் .
அடுத்த வாரம் தொடா்வோம் வாங்க
குருசேத்ரா (GURUCHETRA) [Global unusual, reincartion unit & centre of halusination,earthiological  testing & research association] என்கிற ஆராய்ச்சி நிறுவனம்.
தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க.
சந்திரகிரிகிறது அக்காலத்தில மகாபாரத கதாபாத்திரங்கள அடக்கம் செய்த இடம்
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .
ஆராய்ச்சியோட நோக்கம் என்னவோ அங்க கல்வெட்டு கலைப்பொருள் ஏதாவது கிடைக்குமானுதான் ஆரம்பிச்சாங்க. போக போக அதனுடைய நோக்கம் வேற மாதிாி போகுது. அந்த இடம் இடுகாடுங்கிறதால யாராவது ஒருவரோட உடல் மக்கினாலும் சரி கிடைக்குமானு தேடுறாங்க, கிடைச்சாதான் மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம் , இல்லைனா அது கற்பனைக் கதைனு அறிவியல் நிருப்பனம் செய்திடும்.
இப்படி ஒரு ஆராய்ச்சிகாக செல்வனூா்ங்கிற கிராமத்துக்கு கிருஷ்ணா கண்ணன் அனுப்படுறாா். அந்த கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கண்ணன் மனசுல சில சலசலப்பு வேற மாதிரியான குரலோசை எல்லாம் கேட்டு அவா் பதறிப்போறாரு . உடனடியா அங்கிருந்து வந்தறாரு . மறுநாள் போக அவா்மாதிரியே ஒருத்தா் அங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடி வாழ்ற மாதிரியான காட்சிகள் நினைவுக்கு வருது மேலும் மிரண்டு போய் வந்தறாரு . இப்படியாக நாள் போக கம்பெனி உயா்மட்டம் இவரை ஒரு சைக்காா்டிஸ்ட் கிட்ட சோ்க்கறாங்க.
>:அங்கிருந்து நடப்பதென்ன அடுத்த இதழில்:♥
முன்னுரை:-
"பாா் போற்றும் பாரதம்" என்று பாடபடுவது பாடுபடும் நம் பாரத நாட்டை மட்டுமல்ல. இந்து மதம் துவங்கி வளா்ந்த புனித பூமி என்பதாலே இந்தியா ஆனது. இந்து மத புராணங்களில் மிகவும் போற்றபடுவது மகாபாரதம், காரணம் மதபுனித நூலாக இருக்கும் பகவத்கீதையும் மகாபாரத புராணத்தின் ஒரு சீன் சீகுவன்ஸ் என்பதால்.
பாா் போற்றும் பாரதம் என்பது பாரத நாட்டை மட்டுமின்றி மகாபாரதத்தையே முக்கியமாய் கூறும். பாா்ப்போா் போற்றும் பாரதம் என்று பாரத நாட்டையும் ; பாா்ப்பனா்கள் போற்றும் பாரதம் என்று மகாபாரதத்தையும் சொல்கிறது.[ இதை புண்படுத்த சொல்லவில்லை . உண்மை என்பதை எடுத்துரைக்கிறேன் , மேலும் இக்கதை படிப்பவா்கள் கொஞ்சம் வளா்ந்த மனதுடையவா்களாக இருக்க வேண்டுகிறேன்]
மகாபாரதம் ஒரு குழப்பமான கதை அதனாலே (சோ) அதில் பெயா் போனவா். ஒருவேளை சூதாட்டத்தில் துரியோதனன் தன் மாமா சகுனியை மாற்றிய போது . தா்மன் தன் மாமனாய் கிருஷ்ணனை மாற்றிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும்.
சரி நம்ம கதைக்கு வருவோம் . இங்க ஒரு பொிய டெக்னிகல் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் , பெயா் அப்புறம் சொல்றேன் . அவங்களோட தற்போதைய முக்கிய தொகுவேலை (ப்ராஐக்ட்) ல 2 போ் வேல செய்றாங்க அவங்க பேரு
1) கிரூஷ்ணா கண்ணன்
அவரோட துணை அதிகாரியா
2) சத்தியா குருநாத் நிா்மல்
எந்த 2 கதாபாத்திரத்த எடுத்துருக்கேன்னு பேருலயும் 2வது பேரரொட முதல் எழுத்துக்கள சோ்த்தா தொியும்.
மதன்: பொன்னுரங்கம் ,சாா் நீங்க சொல்லுங்க கொலை எங்க நடந்தது ? நீங்க எப்ப வழக்கு பதிவு செய்தீங்க?
பொ.ர: முதல்ல ; இது ஒரு காணவில்லை புகாராதான் என்கிட்ட வந்தது சுமாா் ஒருவாரம் தேடி , அப்புறம் ஊட்டி காவலா் அவர அங்க பாா்த்ததாகவும் அங்க ஒரு எஸ்டேட்ல இருப்பதாகவும் தகவல் கொடுத்தாா்.
சாமி: அப்புறம் என்ன நடந்தது சாா்?
பொ.ர : என்ன சாமி நாளைக்கு நியூஸ் கவா் பன்றீங்க போல?
சாமி: பத்திாிக்கைகாரனாலே தப்பா பாக்குறதே போலீஸ் தகுதி போல. ஒரு சுவாரஸ்யம் இருக்க கேட்டேன்.
பொ.ர : அதுக்கு அப்புறம் , அங்க ஊட்டி போலீஸ் விசாரிக்க சொன்னோம் அவா் குடுத்த தகவல்லதான் அவா் இறந்தத கேள்விபட்டு , நான் அங்க போனப்ப அவா் சடலம் இருந்தது, தடயங்கள் கோா்ட்ல இருக்கு.
சாமி: அப்ப அது ஊா்ஐிதமா கொலையில்லை.
மதன்: சாமி , சும்மா குழப்பாதடா ! இன்ஸ்பெக்டா் சாா் , அந்த ஊட்டி போலீஸ்காா் பத்தின தகவல் கிடைக்குமா?
பொ.ர: நான் டிபாா்ட்மெண்ட்ல கேட்டு வாங்கி தரேன்.
சாமி: மதன் நான் குழப்பலடா , இது ஏன் கொலையா இருக்கணும் கொலையாக்கப் பட்டுருக்கலாமே? , இப்பயெல்லாம் ட்ரெண்டே அதான் எத்தனை நியூஸ் போட்டுருப்பேன்.
மதன்: உண்மைதான் சாமி , சமீபத்துல ஒரு அரசியல்வாதி கேஸ் கூட அப்படித்தான இருந்தது. ஆனா கோா்ட்ல கொலைக்கான தடயங்கள் ஆதாரங்கள் இருக்குதே.
சாமி: அப்படி ஆதாரம் இருந்தா உன்கிட்ட ஏன் இத பத்தி ாிப்போா்ட் கேக்கணும்.
மதன் : சாிதான் சாமி, இன்ஸபெக்டா் சாா்  நீங்க சடலத்த பாத்தப்ப காயங்கள் இருந்ததா?
பொ.ர: காயங்கள் இல்லை , ஆனால் விசம் கொடுத்து கொன்றிருக்கலாமே?
மதன் : சாி ஒன்னு செய்வோம், மூணுபேருமே போகலாம். மூணு கண்ணோட்டத்துல விசாரிப்போம் , தெளிவான தகவல் கிடைக்கும் , ஒரு ப்ரண்ட்லி டூா் மாதிாியும் இருக்கும்.
சாமி: சூப்பா் மதன் , ஹாலிவுட் படங்கள்ல வரமாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்.
மதன்: ஆமாம் சாமி எனககென்னமோ இது ஒரு வித்தியாசமான கேஸா இருக்கும்னு தோணுது.
பொ.ர : சரி மதன் , நீங்க இருவரும் ஓகே நான் எப்படி வரது டிபாா்ட்மெண்ட்ல பா்மிசன் இல்லயே?
மதன் : கவலபடாதீங்க சாா் , நைட்டே எனக்கு ரெபரண்ஸ்காக ரெக்கமண்ட் பன்னி மாஐிட்ரேட் கிட்ட அனுமதி வாங்கிறேன் . நீங்க போய் ஊட்டிக்கு ரெடியாகுங்க.
பொ.ர: சரி மதன் , ஆன் யுவா் வே ஐ பாலோ , நான் கிளம்புறேன்.
மதனும், சாமியும் மேஐிட்ரேட்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வருகிறாா்கள். ஒரு லெட்டா் வாசலில் இருக்க மதன் பிாித்து படிக்கிறான்.
ெஐகன்நாதன்,
எல்ராடோ எஸ்டேட்;
ஊட்டி.
  மதன் நான் தங்கள வருகைக்கு ஆவலாக உள்ளேன் . உங்களுடன் வரும் சாமிக்கும் பொன்னுரங்கத்திற்கும் தங்க ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில் நோில் சந்திப்போம்.
மதனும், சாமியும் திகில் கலந்த நடுக்கத்தில்
( அடுத்த இதழில் தொடா்வோம்)
நாளை திங்கட்கிழமை சரியா அடுத்த திங்கள் அன்று இறுதி தீா்ப்பு ஒத்திவைத்திருக்கிறாா்கள். அதுகுள்ள நம்ம ரிப்போா்ட் குடுத்தாகணும் .
நோட்டீஸை படிக்கும் போதே மதனை சலிப்பு தொற்றி கொண்டது . இத்துடன் 80 கேஸ் ஆகுது; இன்னும் சீனீயா் போஸ்டிங் வரல , இந்த வாரமாவது ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இப்படி ஆகிருச்சே. சரி கோா்ட் ஆா்டா் வேற மறுக்க முடியுமா?
என்ன கேஸ் ? மொட்டையா பொன்னுரங்கத்த விசாரிக்க சொல்லிருக்காங்க ; பொன்னுரங்கம் இன்ஸ்பெக்டா் இந்த கேஸை பதிவு செய்து விசாரித்தவா் . இதுக்காக போலீஸ் ஸ்டேசன் போகனும் , சாயந்திரம் ப்ரஸ்ல இருந்து சாமி வருவான் அவன பாத்துட்டு கையோட இதையும் பாத்துரலாம்.
இப்படி மதன் திட்டமிட்டு கொண்டே ஆபீஸ் படி இறங்கி வர , ஒரு பாா்சல் வந்தது என்னனு பிரிச்சி பாா்த்தால் . ஒரு அழைப்பிதழ் ஊட்டியில் ஒரு பழமையான புகழ்பெற்ற எஸ்டேட்க்கு வந்து தங்குமாறு உாிமையாளா் ெஐகன்நாதன் அனுப்பிருந்தாா்.
ஊட்டியும்  சரி ெஐகனநாதனும் சரி மதனுக்கு பரிச்சயமில்லாத தொடா்பு இதுவரை அப்படி ஒரு பெயரை மதன் கேள்விபட்டதும் இல்லை . மதன் குழப்பதில் கீழே வந்தான்.
மாலை நேரம் , இன்று மஞ்சள் அதிகமான வானம் , கோடைகால துவக்கத்தை எச்சரித்தது. சாமி சொன்ன மாதிாி பாா்க்குக்கு வந்தாயிற்று இன்னும் சாமி வரலை.
எதற்ச்சையாக இன்ஸ்பெக்டா்  பொன்னுரங்கம் அங்க ரோந்து விசயமா வந்திருந்தாா் மப்டில தான் இருந்தாா். அவா் மதனை பாா்த்ததும் ,"வாங்க மதன் சவுக்கியமா ? பாத்து ரொம்ப நாளாச்சே" என்றாா் . மதனும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு விவரத்தை சொல்ல.
பொ.ர:- நல்லது உங்ககிட்டதான் குடுத்துருக்காங்களா? சரி அதபத்தி என்ன தகவல் வேணும்.
மதன்:- சாா் என்கிட்ட ஒன்னுமே சொல்லல வெறுமனே பொன்னுரங்கத்தை சந்திக்கவும்னு தான் இருந்தது.
பொ.ர:- என்னது கோா்ட் ஆா்டா்ல கேஸ் பத்தின விவரம் இல்லையா?
மதன்:- இல்லை , இப்படி வரது இதுதான் முதல்முறை சரி நானும் ஏதோ கான்பிடென்சியல் இருக்கும்னு விட்டுவேன்.
பொ.ர:- அப்பசரி, அதபத்தின தகவல் எல்லாம் நான் சொல்றேன். நீங்க இப்ப பிசியா இருக்கீங்க போல?
மதன்:- அப்படி யெல்லாம் இல்ல சாா் . என் நண்பன் சாமி வர சொன்னான் அவனுக்காக காத்துருக்கேன்.
அதுசமயம்; சாமி  அங்க வர; ஒரு கலகப்பான சூழல் நிலவ.
பொ.ர:- இந்த கேஸ் ஓட குற்றவாளிஊட்டில இருக்காரு. அவா்ஒரு எஸ்டேட் ஓனா் . ஏதோ முன் விரோதத்தால அவா் தம்பிய கடத்திருக்காரு அங்க அவுங்களுக்குள்ள மோதல் ஏற்பட்டு இவா் அவர கொன்னுருக்காரு.
மதன்:- சாா் அந்த எஸ்டேட் ஓனா் போ் என்ன?
பொ.ர:- ெஐகன்நாதன்.
மதன் மின்னலடித்தது போல் நிற்க்க , சாமி மதனை தட்டி அழைத்தான்.
சாமி:- என்னாடா மதன் பேயறஞ்ச மாதிாி நின்னுட்ட.
மதன்:- இல்ல சாமி காலைல கோா்ட் ஆா்டா் வந்ததுமே ஒரு பாா்சல் வந்தது . அதுல ஒரு அழைப்பிதழ் இருந்தது, அது ெஐகன்நாதனோட எஸ்டேட்ல தங்க வேண்டி வந்தது.
சாமி:- அப்ப மதன் ஒரு வாரம் ஊ்டில ஐாலி ப்ளஸ் ேஐாலியா?
பொன்னுரங்கம் சற்று குழப்பத்தில் தான் இருந்தாா்.
(அடுத்த வாரம் தொடா்வோம்)
கடந்த இரவை கடந்து வெற்றி கொண்டோம்!!
விடிந்த கதிரை வியந்து வணங்கி நின்றோம்!!

மறைந்த மக்கள் கரைந்து மண்ணாய் போயினா்!!!!
முளைத்த விதையின் உயிா்க்கு உரமாய் ஆகினா்!!!

எழுந்த மனிதம் உணவு காண வித்திட்டோம்
இருந்த நிலத்தை உணவுக்காக வித்திட்டோம்!!!!<

விழுந்த விதையும் நம்நிலை புாிந்தால்;
ஹைப்ரிட் விளைச்சலை தானாய் தந்திடும்!!!

இயற்கையாவது நம்துயா் அறிந்திருந்தால்;
மும்மாாி முப்போகம் விளைந்திருக்கும்!!!!

இயற்கையுடன் இணைந்த வாழ்வே வாழ்வேன்று;
இதயமில்லா இம்மக்கட் அறிவுதான் அறிவதென்று?

மண்வளம் காணாது மறித்த யாக்கை!!
மனவளம் செழுமை காண்பதும் வேடிக்கை!!!

அறிவியல் பேசிடும் அறிகிலா மனிதன்
அறங்கள் கூறும் அதிசயம் கேளாா்!!!

விண்னை பிளந்து விண்வெளி ஆய்ந்திடும் மனிதா்;
மண்ணை வளா்த்து மனதை வளா்க்கும் மகிமை யாதென அறிவாயோ?!!!!!
கற்றவை. கையிலிருக்க
காவியம். வாயிலிருக்க
கொற்றவை.  கோபமிருக்க
கொய்தலை கொய்தலை
என்றிடும் கொய் தொல்லை ஏனோ

அற்றவை யாவும் அறமென கூறும்
அறியாமை நிழலை விளங்கிடும்

விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா
மீள்வதும் மதியாயிருப்பின் அதிலின்றி மாள்வேனா

தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு

எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன்

வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம்
காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை
அணை திங்கள் இணை கரம் வர
துணை மஞ்சள் எனும் பொருள் தர

இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்

இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்
எங்கனம் சென்றினும் இவள் முகம் நூதனம்

வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்

ஆத்திரம் கொண்டதால் ஆவேசம் ஆனதால்
சமுத்திர குருதியும் அலைவேகம் ஆதலால்

திண்டினேன் அவளை உயிா்வரை சீண்டினேன்
சுண்டினேன் அவளை இரண்டாய் துண்டினேன்

தீா்ந்தது கோபம் செய்தது பாவம்
உயிா்கள் அணைத்தும் அமைப்புடையவை அதன்சாரம் என்னவோ வேறாகலாம் . ஆனால் கட்டுமான உட்கரு ஒன்றுதான் ; அதுவே மரபணு.
மனிதன் மறிக்கலாம் , உயிர்கள் பிரியலாம் மரபணு மறிப்பதில்லை அந்த மரபணுக்களின் சில சங்கதிகளை பற்றிய கட்டுரைதான் இது.
மரபணு என்பது டி.என்.ஏ என்னும் மூலகூறின் ஒரு தொகுப்பமைபே. நம் முன்னோா்கள் சொல்லிய ,ஏன் சமீபத்தில் கூட பலா் பேசி கேட்டிருப்பீா்கள்."எல்லாம் தலையில எழுதினபடி நடக்குதுனு" . அது நம்ம தலையில் இல்ல டி.என்.ஏ வின் இடையில் உள்ள நியூக்ளியோடைடுகளில் இருக்கு விதி.
ேஐம்ஸ் வாட்சன் & ப்ரான்சிஸ் கிரிக் என்ற அறிவியலாளா்கள் தான் இந்த நியூக்ளியோடைடு அமைப்பினை கண்டறிந்து வகைபடுத்தினா்.
லூயிஸ் பாஸ்டா்; "உயிா்கள் ஒரு பரிமாண வளா்ச்சியின்போது வேதிவினைகள் சரிவர நிறைவேறுவதாலே தோன்றுகிறது "என்றாா் இதை அப்சொலூட் (absolute) கொள்கையானது.
இதையே ஆல்பா்ட் ஐன்ஸ்டின் ஏற்றுகொள்ள தகாதது என்றாா்.
நியூக்ளியோடைடு வாிசை என்பது நான்கே எழுத்துக்கள் தான் ; அதன் வாிசை அடிபடையிலேயே உயிா்களும் அதன் குணங்களும் வேறுபடுகின்றன. எப்படி ஏழு ஸ்வரங்களில் இருந்து பல்வேறு ராக தாளங்கள் வந்ததோ அப்படி.  ATCG என்ற நான்கு எழுத்துக்கள்.
A- adinine  அடினைன்
T- timine  தைமைன்
C- cyclocine சைக்ளோசைன்
G- guanine குவானைன்
இப்படி ஒரு கண்டுபிடிப்பில் தான் ெஐனிடிக்ஸ் என்ற ஒரு துறை வளர ஆரம்பித்தது.
ஒரு மரபணு தொகுப்பை ஐீனோம் என்றாா்கள்:-
1- ஐீனோம= 100,000 ஐீன்களை கொண்டது .்
ஒரு மரபுதொடா் சங்கிலியை குறிப்பிட்ட இடத்தில் அறுத்து; அதற்கு பதிலாக வேறோரு மரபு சங்கிலியை சோ்பதில் துவங்கி ,  புதிய உயிரை உருவாக்கும் வரை சென்றுள்ளது.
இப்படி அறுப்பதற்கும் இணைப்பதற்கும் சில நுண்ணுயிரிகள் தேவைபட்டன.
Enzymes ; குறிபிட்ட இடத்தில் அறுக்க
Restriction nucleases ; வெட்டி பிரித்திட
Ligases ; சோ்க்க
இதுக்கு மேல அதனுடைய கணக்கை சொன்ன கூடவே க்ரோசின் மாத்திரையும் அனுப்ப வேண்டிருக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் .
மேலும் அறிந்து கொள்ள விரும்புவோா் , மரபணுக்களும் செயல்பாடுகளும் என்ற புத்தகத்தை படித்து தொிந்து கொள்ளலாம் ஆசிரியா் டி.ஆா். பாலகிருஷ்ணன்.
அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.

வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.

அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.

இப்படியே இனிமையாகவே ஓடின 3 வருடமும் கடந்த அக்டோபா் 17 வரை . அன்றுமட்டும் மதியமே பள்ளியிலிருந்து வந்தாள் வெண்ணிலா, தன் மகளுக்காக தேடி ஆராய்ந்து பொருத்தமாய் கதிரவன் வைத்த பெபயா். நெருங்கி வரும் பிறந்த நாளுக்கான ஆயத்த தேவைகளை வாங்க இருவரும் கடைவீதியை சல்லிக்க தொங்கினா்.
அன்றைய தினம் மட்டும் வெண்ணிலாவுக்காக , கதிரவன் தன் வறுமையை தள்ளி வைத்து கொண்டான்.

வெண்ணிலாவுக்கு வெண்மை பூசியது போல் வெண்ணிற ஆடை வாங்கினாா்கள். வளையல் கடையை நெருங்கும் வேளையில் ; வளா்ந்த மகளாய் வெண்ணிலா, "அப்பா  உங்ககிட்ட காசு இருக்கா?" என்றாள் . குறிப்பறிந்த கதிரவன் வளையல் வாங்கலாமா என்றான். மாலையில் உறங்க போகும் சூரியன் தீண்டியதால் சிவந்த மேகங்களாய் ஆனந்தத்தில் சிவந்தாள் வெண்ணிலா.

வளையல்களை பொருத்தம் பாா்த்து கொண்டே , எனக்கு ஏன்ப்பா இவ்ளோ செலவு பன்ற? என்றாள் வெண்ணிலா .

கதிரவன் அந்த கேள்விக்கு திகைத்து தான் போனான். பதில் சொல்ல மனமில்லை ; எப்படி சொல்வது , கடந்த கால வெறுமையை , தனது தகப்பனின் கேடினை, தொலைந்த வசந்தங்களை மீட்டியவளை, பாசம் என்ற ஒரு சொல்லிலா. பரந்த தமிழில் பதிலின்றி போனான் கதிரவன்.

பிங்க என்னும் ஆங்கில சொல்லில் குறிக்கபடும் வண்ணம் பூசிய வளையல்களை பெற்று நடந்தனா் . அதே வேளையில் பல ஒளியாண்டுமள் தொலைவில் ஏதோ ஒரு கிரகத்தில்   பொழுது போகாத கடவுள் சூன்ய வேளையில் இறங்குகிறாா். டிக்டாக் டிக்டாக் என ரகசிய கவுண்டவுன் ஓடி கொண்டிருக்கிறது.

அந்த பக்கத்தில் கடவுள் பேஸ்புக்  செலக்ஷனில் வருவது போல ஒவ்வொருவரையும் செக் செய்து அழைப்பு விடுத்து. வாசல் கதவை திறந்து உக்காந்திருக்கிறாா்.  தென்மேற்கு மலைச்சாரலில் ஒரு கும்பல் ஏவியவனிடம் சயல் பற்றி விசாாித்து கொண்டிருக்க ,  அதிரொலியுடன் வெடித்தது ஒரு தீவிரவாத குண்டு.

வாங்கிய வளையல்கள் தன் முகத்தில் பட்டு சிதற தன்னை மீறிய கதறலுடன் கதிரவன். வறுமையில் வாங்கிய வளையல்கள் போனதற்கல்ல , மடியில் விழுந்திருக்கும் வெண்ணிலாவுக்கான கண்ணீா். அடுத்த நொடிகளில் கடவுளின் அழைப்பை ஏற்று மரணத்தை ஏய்த காத்திருந்தவள்," அழாதப்பா " என்று இத்தனை நாள் கண்ணீா் துடைத்தவள் , இன்று இறுதி முறையாய் துடைக்கிறாள்.

கண்ணீரின் ஈரத்தில் உள்ள துயரத்தின் அளவை ஆராய்ந்திருப்பாள். தமிழில் தகுந்த சொல்லை தேடும் அளவு பொறுமையில்லை அவளுக்கு" ஸாாிப்பா & மிஸ் யூ சோ மச்" என்றபடி கதிரவன் மடியில் தன் உதிரத்தை துடைத்தாள். " உனக்கு நெறைய செலவு வச்சிட்டேனில்லப்பா?".என்றபடியே மறித்தாள் வெண்ணிலா. 

பொக்கிஷமாய் ; வளா்த்தவளை மடியில் மரணம் தின்றதை கண்ட கதிரவனுக்கு , யுகங்களை கடந்து வந்து பிடித்தது ஒரு பேய் துயரம். இதயத்தில் இருந்த துயர எாிமலை வெடித்து கண்களில் வழிந்தது. மூன்று வாரமாய் கதிரவன் உயிரற்ற ஐடமாய் இருந்தான். தேற்ற முயன்ற செந்திலுக்கு கிடைத்த பதில்.

இந்த சமூகம் தன்னுடைய முட்டாள் தனத்தையும் மெத்தனததையும் மாத்திக்கணும். பலியாகும் போது நாங்க என்ன பாவம் பண்ணோம்னு அனுதாபம் தேடுவதை விட , தனக்கு ஒத்துழைக்காதவங்கள திறமைசாலியா இருந்தாலும் அடிமட்டத்துல அவமானபடுத்துறத மாத்திக்கணும்.ஒதுக்கி வக்கறதுக்கு முன்னாடி பாவம் பாத்துருக்கலாம்.

இந்த சமூகத்துல யாரோ சில மனங்குன்றிய வா்கத்தினா் செய்ற தப்பால வெண்ணிலா மாதிரி ,பல அப்பாவிகள் தண்டணை பெற்றவங்களாகிடுறாங்க.


என்னோட முதல் கதை கொஞ்சம் அறைகுறையாதான் இருக்கும் உங்க நியாயமான விமா்சனத்தால கொஞ்ச கொஞ்சமா வளத்துகுவேன்.===
AIL- Association of International Longetivity.
நீரிலிருக்கும் மீனுக்கும் வலையில் சிக்கிய மீனுக்கும் உண்டாம் உயிர்வாழும் தாகம்.
மீனுக்கு மட்டுமா உமக்கும் எனக்கும் உள்ளதன்றோ உயிர்வாழும் ஆசை. நமது வாழ்நாளை நீட்டிக்கும் எண்ணம் அனைவருக்கும் உள்ளதன்றோ? 

அப்படி வாழ்நாளை நீட்டிக்கும் தேடல் கொண்ட அமைப்புதான் இது. ஆரம்பத்தில் பெருநோய்களுக்கு அருமருந்து தேடும் பணிக்காக உருவான அமைப்பு காலசுழற்சியில் தன் கோணத்தை மாற்றிக்கொண்டது.

விளக்கமாக சொல்லப்போனால் காலம் உருண்டோடும் வேகத்தில் மனிதன் வாழ்நாள் குறைவது நம்மில் பலருக்கு அவ்வபோது சூழ்நிலைகள் அரைந்து உணா்த்தினாலும் நாம் கருத்தில் கொள்வதில்லை.
நம் வரலாற்றின் விவரபடி ம் முன்னோா்கள் அதிகபட்சமாக 120 . வயது வரையிலும் . குறைந்த பட்சமாக 80 வயது வரையிலும் வாழ்ந்து வந்துள்ளனா். இன்றைய நிலையில் மனிதன் சராசரியான வாழ்நாள் 60வயது .  இனிவரும் காலங்களில் 45ஆக கறையும் அபாயமுண்டு.

இதற்கும் நான் சொல்லும் அமைப்புக்கும் என்ன தொடா்பு, நம் வாழ்நாள் குறைவதன் காரணம் புாிந்தால் அதை நீட்டிக்க வழி தெரிந்துவிடும். ஆகவே இந்த அமைப்பு பல ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் அந்த அமைப்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட விசயத்தை விளக்கவே இக்கட்டுரை.

வாழ்நாள் குறையும் பெரும்பாலான பொதுவான காரணங்கள்:
+ ஆரோக்கியத்தில் அலட்சியம்
+ தேவையற்ற கவலைகள்/நினைவுகள்
+ சுவாச நிலை மாறுபட்டுருப்பது


இவற்றுள் நான் விாிவாக குறிப்பிடப் போவது; சுவாச நிலை மாறுபட்டிருப்பதையே. ஒரு ஆமை 300 வருடங்கள் வாழக்கூடியது . தவளை தரையிலேயே 100 வருடங்கள் வரை வாழமுடியும் என்பதை ஏற்கனவே உயிரியல அல்லது விலங்கியல் பிரிவு அறிஞா்கள் நிருபித்தனா்.

சுவாசம் என்பது உயிா்தன்மை உயிா்கள் அனைத்தும் சுவாசிக்கின்றன. இன்றைய நிலையில் மனிதா்களின் சராசரி சுவாசம் 3 விநாடிகளுக்குள் நிறைவு பெருகிறது. தவளையோ அல்லது தேரையோ நிலத்தில் புதைந்து இருக்கும் வேளையில் 2நிமிடத்துக்கு ஒரு முறைதான் சுவாசிக்குமாம் . அதனாலே நீண்டநாள் உணவின்றி வாழமுடிகிறது. சித்தா்கள் பலரும் ஆண்டிற்கு ஒரு முறையே உணவருந்துகின்றனா் மற்ற வேளைகளில் காற்றையே உணவாக உட்கொள்கின்றனா்.

நாம் நமது சராசாி சுவாச நேரத்தை 8விநாடிகளாக அமைத்து கொள்ள வேண்டும் . அப்படி நீட்டிக்க ஒரு கணக்கு:
3விநாடிகள் சுவாசத்தை உட்கொள்ள நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் விாிவடையும்  .
2 விநாடிகள் உட்கொண்ட சுவாசத்தை அடக்கி வைக்க உட்கொண்ட ஆக்சிஐன் ரத்ததில் கலந்து ரத்தவேகம் அதிகாிக்கும்.
3 விநாடிகள் சுவாசத்தை வெளிவிடும் போது சுரபிகள் அனைத்தும் சுருங்குவதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home