கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்... அதற்கான அறிவியல் காரணங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ....

 Dr.சுனிலின் கேள்விகள் ? பதிலளிக்க முடியாததாக இருக்கிறது....!!
.
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:



[ எல்லா கேள்விகளுக்கும் சொல்ல நானும் இன்னும் நிறைய தேட வேண்டும்... முடிந்தவரை சொல்கிறேன்... தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்....]
.
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் ?
இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை ?

.
புராணகளும் இதிகாசங்களும் ஒன்றை சொல்கின்றன... பூமியில் பிறந்து வளர்ந்ததாக.. மேலும் அன்று இந்தியா என்று ஒன்று இல்லை ... மேலும் பிறந்தது எல்லாம் யாரோ ஒரு தீய அசூரனை கொல்ல என்கிறபொது.. அதர்க்கு தொடர்பு உள்ள இடத்தில் தான் பிறக்க வேண்டும்... மேலும் அந்தக்கால நில வரையறைகள் இன்று இல்ல்லை ... இந்திரன் இலங்கையில் பிறந்ததாக வரலாறு உண்டு... பாண்டியனே லேமுரியா கண்டத்தில் தான் ஆட்சி செய்தான் என்னும் போது அதர்க்கும் முந்தைய புராணங்கள் இந்தியாவில் தான் நடந்தது என்பது சந்தேகம்...


2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர் ? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவிங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை ?
.
நன்றாக கவனியுங்கள் எந்த மத அல்லது எந்த கலாச்சார கடவுள்களுக்கும் அவ்விளங்குகள் வாகனமாய் இருந்தது கிடையாது... பெரும்பாலும் அக்சுருத்தும் விலங்குகலே வாகனமாய் பயன்படுத்த பட்டிருக்கின்றன...

3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர் ? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை ?

எல்லை சாமிகளை மறந்துவிட்டீர்களே அவர் யாரும் அரச குடும்பத்தார் இல்லையே... கிருஷ்ணர் இடையர்களோடு வளர்ந்தார்... சிவன் அரசகுலம் அல்ல ராமர் வனவாசம் செய்தார்.. பிறப்பில் அரசன் என்பது உயர்ந்தகுளம் அல்ல... மீனவ தலைவன் மீனவ அரசன் எனப்படுகிறான். தாழ்ந்த குலம் இருந்தாகவே இல்லையே...  வள்ளி குறத்தி.. யோசியுங்கள்...
.
4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன ?
அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா ? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள் ?

.
வதம் செய்வதையும் தியானம் செய்வதையும்... தவத்தில் இருந்தைத்தையும் கேள்வி படவில்லையா?  பிறந்த அல்லது அவதரித்த கடவுள்கள் மரணம் அடையவில்லையா... இங்கிருந்தால் இப்படி இருக்குமா? ... குறைந்த பட்சம் நம்மால் கங்கையின் ஊற்று எங்குள்ளது என்று கண்டறிய முடியவில்லையே... தலைகாவிரி போல் தலைகங்கை எங்கே?,,

5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை ?
.
வேதங்கள் சொல்லிவிட்டதே கலியுகத்தில் இறைவன் வருவதில்லை என்று... மேலும் முன்பைப்போல இப்போது யாகங்களும்.. தவங்களும் யாரும் செய்வதில்லையே வரம் தரும் அளவிர்க்கு...


6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார்.
கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ?
அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை ?

.
இயற்கை சீற்றம் என்பதுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு அது வேற டிபார்ட்‌மெஂட் ... சில வேளைகளில் கடவுள்களே இயற்கை சீற்ரத்தில் சிக்கியுள்ளத்தை எல்லை சாமிகளின் வரலாறுகள் சொல்லும்.. மேலும் அப்புராணங்களே சொல்லுகின்றன காலம் வரும்வரை கடவுளும் காத்திருக்க வேண்டும் என்று..

7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை ? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன ? இவைகள் மிகப்பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன ? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை ?
.
மாயன் காமேர் சூமெரியா, வூடு, ஜம்நா போன்ற பழங்கால வெளியுலக கலாசார கடவுள்களை ஒரு நோட்டம் விடுங்கள்.. மேலும் இஸ்லாம் இந்து மடத்தில் இருந்து பிரிந்து தோன்றியது... இந்து மாத அரசன் சிடார்த்தான் தான் புத்தர் என்பது தெரியும் அல்லவா... புத்தன் சீடர் தான் கிருஷ்து என்று ஒரு வரலாறு தற்போது வெளிவண்துள்ளது


8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார் ?
.
ஏர்ப்புதையது தான்..

9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள் ? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும் ? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும் ?
.
இந்த வரலாற்றில் எனக்கும் நண்பிக்கை இல்லைதான்... என்றாலும் நரசிம்ம அவதாரம் போல் ஏதேனும் காரணம் சொல்லியிருக்கலாம் ..

10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார் ? மானைக் கொல்வது தவறில்லையா ?
.
கூடாது என்று யார் சொன்னது முனிவர்களா, கடவுளா , கண்ணப்ப நாயனார் கதை பாருங்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று கிருஷ்ணர் சொல்லவில்லையா.?... மானை வேட்டையாடுதல் என்பது கொல்லுதல் என்றுதான் ஆக வேண்டுமா ? சிறை பிடிக்கவும் வேட்டையாட வேண்டுமே? காலில் சுட்டு குற்றவாளியை பிடிப்பது போல..


11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை ? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா ?
.
இதுக்கு நான் ராமாயணம் படிச்சி தான் சொல்லணும்.. சோ பாஸ்..

12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா ? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும் ?
.
களவு ஒழுக்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன் ?

.
இந்திய சட்டம் அப்படி அரபியாவில் நடப்பதில்லையா? அங்கு என்ன தண்டனை தெரியாதா?  இந்துக்கள் மட்டுமா இங்கு ...

14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர் ? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை ?
.
முதலில் அது ஆண் உறுப்பு தானா என்று இன்னும் முடிவாகவில்லை.... நாசா வேறு ஒரு காறாணாம் சொல்கிறது... விண்வெளி தோற்றம் பற்றிய ஆய்வில் முதலில் விண்வெளியில் லிங்கம் தான் தோன்றியது என்கிறது....  அதனால் கொஞ்சம் தெளிவான முடிவு கிடைக்கட்டும்...

15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா ? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா ?

காமஸூத்ரா எழுதிய இந்து மதம் காமத்தை புனிதமாக போற்று கிறது... கற்பு நெறி போற்றப்படும் போது வணங்க தக்கது தானே.. 

களத்தூர் கண்ணம்மாவில்
கையெடுத்துக் கும்பிட்ட
சிறுவனை இன்று இந்திய
சினிமா வணங்குகிறது.
விஸ்வரூபமாய் தொடரும்
தலைமுறைகளை வென்ற
தனி அவதாரம் கமல்.
முதல்
படத்திலேயே (களத்தூர்
கண்ணம்மா) சிறந்த
குழந்தை நட்சத்திரத்துக்கான
தேசிய விருதைப்
பெற்றவர் கமல்!
'களத்தூர் கண்ணம்மா',
'ஆனந்த ஜோதி', 'பார்த்தால்
பசி தீரும்',
'பாதகாணிக்கை',
'வானம்பாடி' என 5
படங்களில் நடித்த
பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம்
சேர்ந்தார் கமல். அவர்
வேறு திசைக்குப்
பயணப்பட்டது அதற்குப்
பிறகுதான்!
களத்தூர் கண்ணம்மாவில்
குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானாலும்கூட,
தனது குழந்தைப்
பருவத்து நடிப்பில்,பெரிய
நடிகர்கள் யாருக்கும்
மாஸ்டர் கேரக்டரில் கமல்
நடித்ததே இல்லை!
கமல் நடித்த படங்களைப்
பாராட்டி பாலசந்தர்
எழுதும்போது 'மை டியர்
ராஸ்கல்' என்றுதான்
அழைப்பார்!
கமலின் தந்தை உடல்
தகனத்துக்காக மயானத்தில்
வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன்,
சந்திரஹாசன், கமல்
மூவரும் சிதையின்
அருகில் நிற்க, திரும்பிப்
பார்த்த கமல் 'அண்ணா,
நீங்களும் வாங்க' என
இருவரை அழைத்தார்.
அவர்கள் ஆர்.சி.சக்தி,
ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா.
கதறித்
துடித்தபடி அவர்களும்
கொள்ளிவைத்தனர்!
ஃபிலிம்ஃபேர்
விருதை 18
முறைக்கு மேல் வாங்கிய
ஒரே இந்திய நடிகர்
கமல்தான்!
எண்பதுகளின் மத்தியில்
'மய்யம்' என்ற இலக்கியப்
பத்திரிகையைக் கொஞ்ச
காலம் நடத்தினார் கமல்!
எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன்
பிறந்தேன்',
சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை'
படங்களில் டான்ஸ்
மாஸ்டராகப்
பணியாற்றி இருக்கிறார்
கமல்!
ஆரம்பத்தில் 'சிவாலயா'
என்ற நடனக்
குழுவை ஆரம்பித்து நடத்தினார்
கமல்.அதற்குப் பிறகுதான்
நடன உதவியாளராக
தங்கப்பனிடம் சேர்ந்தார்!
ஆர்.சி.சக்தியின்
இயக்கத்தில் வந்த
'உணர்ச்சிகள்'தான்
கமலைத்
தனிகதாநாயகனாக
ஆக்கியது. ஆனால்,
முந்திக்கொண்டு வெளிவந்த
படம்'பட்டாம்பூச்சி'!
'நினைத்தாலே இனிக்கும்'
படம்தான் கமலும்
ரஜினியும் சேர்ந்து நடித்த
கடைசிப் படம்!
கமல் ரொம்பவும்
ஆசைப்பட்டு,
முற்றுப்பெறாத கனவுகளில்
ஒன்று...'மருதநாயகம்'!
கடவுள்
மறுப்புக்கொள்கையைக்
கொண்டவர் என்றாலும்,
ஆத்திகத்தை கமல்விமர்சனம்
செய்வதில்லை!
தமிழ், மலையாளம்,
தெலுங்கு, கன்னடம்,
ஹிந்தி,பெங்காலி மொழிப்
படங்களில் நடித்திருக்கிற
ஒரே தமிழ் நடிகர்
கமல்தான்!
தன் உடலைத் தானம்
செய்திருக்கிறார் கமல்.
சினிமாவில் இத்தகைய
முன் மாதிரி இவர்தான்!
கமலுடன் அதிக
படங்களில் ஜோடியாக
நடித்தவர்கள் இரண்டு பேர்.
ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!
கமல், சாருஹாசன்,
சுஹாசினி என
அவரது குடும்பத்தில்
இருந்தே மூன்று பேர்
தேசிய
விருது பெற்றிருக்கிறார்கள்!
'ராஜபார்வை' முதல்
தம்பியுடன்
இருந்து அலுவலகத்தைக்
கவனிக்கிறார் அண்ணன்
சந்திரஹாசன்.
கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான்
இருக்கிறது!
ஏதோ மன வருத்தம்...
சாருஹாசனும் கமலும்
இப்போதும்
பேசிக்கொள்வதுஇல்லை!
பிரசாத் ஸ்டுடியோவில்
அகேலா கிரேன்
இறக்குமதி ஆகியிருந்தது.
அதை இரவோடு இரவாகச்
சென்று பார்த்த முதல் நபர்
கமல். பிறகுதான்
பி.சி.ஸ்ரீராம்
போன்றவர்கள்
வந்து பார்த்தார்கள்.
தொழில்நுட்பத்தின்
மீதுகொண்ட தீராத
ஆர்வம்தான் காரணம்!
வீட்டில் நிறைய
நாய்களை வளர்க்கிறார்.
கொஞ்ச
காலத்துக்கு முன்பு இறந்துபோன
நாய்க்காகக் கண்ணீர்விட்ட
தருணங்களும் உண்டு!
' ஹே ராம்' படம் முதல்
டைரக்ஷனாக
வெளிவந்தாலும்,
முன்னமே 'சங்கர்லால்'படத்தை,
டி.என்.பாலு இறந்து போக,
முக்கால்வாசிக்கு மேல்
இயக்கியிருக்கிறார்!
கமல் மிகவும்
ஆத்மார்த்தமாக நேசித்த
மனிதர் மறைந்த அனந்து.
தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த
நண்பர் என்ற அன்பு அவர்
நெஞ்சு நிறைய உண்டு!
அதிஅற்புதமான உலக
சினிமாக்களின் டி.வி.டி.
அணிவகுப்பு கமலின்
ஹோம் தியேட்டர்
கலெக்ஷனில் இருக்கிறது!
பட்டு வேட்டி பிடிக்கும்.
தழையத் தழையக்
கட்டிக்கொண்டு ஆபீஸ்
வந்தால், அன்று முழுக்க
உற்சாக மூடில் இருப்பார்!
தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, ஹிந்தி,
மலையாளம்,
பெங்காலி,கன்னடம்,
பிரெஞ்சு என
எட்டு மொழிகள் கைவந்த
வித்தகர்!
ரஜினிக்குப் பிடித்த
படமான 'முள்ளும் மலரும்'
படம் வெளியாவதற்குக்
காரணமாக
இருந்தவரே கமல்தான்!
'உங்களது படங்களில்
உங்களுக்கு மிகவும்
பிடித்த படம் எது?'
என்று கேட்டால், 'நான்
நடிக்கப் போகும்
எனது அடுத்த படம்' என்பார்.
கமல் மெட்ராஸ்
பாஷை பேசிய 'சட்டம் என்
கையில்', 'அபூர்வ
சகோதரர்கள்'ஆகிய
படங்கள் மெகா ஹிட்.
மெட்ராஸ்
பாஷைக்கு கமலின்
குரு லூஸ் மோகன்!
'சட்டம் என் கையில்'
படம்தான் கமல்
இரட்டை வேடங்களில்
நடித்த முதல் படம்
என்பது பலரும் சொல்லும்
தகவல். ஆனால், அவர்
'பார்த்தால்
பசி தீரும்'படத்திலேயே சின்ன
வயதில் டபுள் ரோல்
பண்ணியிருக்கிறார்!
ஊர்வன, பறப்பன, ஓடுவன
என அனைத்தையும்
சாப்பிடும் அசைவப்
பிரியர் கமல்.
ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து,
சமைத்துச்
சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம்.
அந்த
நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள்
பசியாறி விடுவார்களாம்!
ஆஸ்கர் விருது பெற்ற
'டிராஃபிக்'
படத்தை இயக்கிய
ஹாலிவுட்
இயக்குநர்ஸ்டீபன்
சோடர்பெர்க்கைப்
போன்று ஒரு ஸ்டெடிகேம்
கேமராவை இடுப்பில்
கட்டி, லென்ஸைத்
தன்னை நோக்கித்
திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன்
யூனிட்'டாக
ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின்
நீண்ட நாள் ஆசை!
நடிகர் நாகேசுக்கும்
கமலுக்குமான
உறவு 'அப்பா-மகன்'
உறவு போன்றது.
தன்னை 'கமல்ஜி'
என்று நாகேஷ்
அழைக்கும்போது,
'எதுக்கு அந்த ஜி' என்ற
கமலிடம், 'கமலுக்குள்ள
ஒரு நாகேஷ் இருக்கலாம்.
ஆனால், நாகேசுக்குள்ள
ஒரு கமல் இருக்க
வாய்ப்பே இல்லை'
என்பாராம் நாகேஷ்!
கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில்
துளியும்
நம்பிக்கை கிடையாது.
'ஹே ராம்' படத்தின்
முதல்வசனமே இப்படித்தான்
இருக்கும்... 'சாகேத்ராம்
திஸ் இஸ் பேக்-அப் டைம்'!
நல்ல மூடு இருந்தால்,
நண்பர்களிடம் தன்
கவிதைகளை வாசித்துக்
காட்டுவார். விரல்
ஜாலங்களை, குரல்
ஜாலங்களுடன் கேட்கக்
கிடைத்தவர்கள்
பாக்கியவான்கள்.இருந்தும்
ஏனோ, இன்னமும்
தொகுப்புகளாக
வெளியிடாமல்
தாமதிக்கிறார் கமல்!
''சந்திக்கும் மனிதர்களின்
பேச்சுக்களை,
நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும்
ஆற்றல் எனக்குத்
தெரிந்து சிலருக்கே உண்டு.
இந்த
ஆற்றல்கைவரப்பெற்றவர்கள்
வரிசையில் முக்கியமான
இடம்
கமலுக்கு உண்டு''என்கிறார்
யூகி சேது!
'மர்மயோகி'யில் கமல்
ஒரு அகோரி கேரக்டர்
செய்வதாக இருந்தார்.
கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட
தாடி வளர்த்தது அதற்காகத்தான்.
'சாமா சானம்'
என்றுதொடங்கும் பாடல்
ஒன்றைக்கூட இதற்காகத்
தயார்
செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி'
டிராப் என்றவுடன்
தாடியை எடுத்துவிட்டார்!
நன்றாகத் தமிழ் பேசும்
ஹீரோயின்களை கமலுக்கு மிகப்
பிடிக்கும். தமிழ்க்
கதாநாயகிகள்
அதிகம்வருவதில்லை என்ற
வருத்தமும்
அவருக்கு உண்டு.
அதனால்தான்
அபிராமியையும்
சினேகாவையும்அழைத்துத்
தன் படங்களில்
வாய்ப்பு கொடுத்தார்!
'காலையில் எழுந்ததும்
யார் முகத்தில் விழிக்க
விருப்பம்?' என்று கமல்
முன்பு நடத்திய
'மய்யம்'பத்திரிகையில்
ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
கமல் சொன்ன பதில்,
'காட்டில் இருந்தால்
நரி முகத்தில்,கட்டிலில்
இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!
பாபர்
மசூதி இடிப்பின்போது யதேச்சையாக
டெல்லியில் இருந்தார்
கமல். விஷயம்
கேள்விப்பட்டதும்
உடனடியாக அப்போதைய
பிரதமர் நரசிம்மராவைச்
சந்தித்து, தமிழ்
திரையுலகம் சார்பாக
எதிர்ப்பைப்
பதிவு செய்தார். பாபர்
மசூதி இடிப்புக்கு எதிராக
சினிமா உலகில்
இருந்து முதன்முதலில்
எழுந்த எதிர்க்குரல்
கமலுடையது!
முட்டையின் மஞ்சள்
கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில்
மிளகுப்பொடி தூவிச்
சாப்பிடுவது கமலுக்குப்
பிடித்தமானது.
கூடவே பிளாக் டீ!
4
ஆண்டுகளுக்கு முன்பு விஜய்
டி.வி-யில் கமலின் பிறந்த
நாளுக்காகப் புகழ்பெற்ற
கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம்
நடத்தினார்கள்.
ஒரு நடிகரைப் பாட்டுடைத்
தலைவனாக
வைத்து நடத்தப்பட்ட முதல்
கவியரங்கம் அதுதான்!
'ஆளவந்தான்'
ரிலீஸின்போது, 'இனிமேல்
100 நாட்கள் எல்லாம் படம்
ஓடாது.
சினிமா பார்ப்பது வாழைப்பழம்
சாப்பிடுவது மாதிரி.
சாப்பிட வேண்டும்
என்று ஆசைப்பட்டால்
அருகில் உள்ள பெட்டிக்
கடையில் வாழைப்பழம்
கிடைக்க வேண்டும்'
என்று சொல்லி, அதிக
தியேட்டர்களில் ரிலீஸ்
செய்யும்
சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!
'யாரையாவது டின்னருக்கு அழைக்க
வேண்டும் என்றால்
யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம்
கேட்கப்பட்டபோது,
'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து,
ஆட்டுப் பாலும்
நிலக்கடலையும் பரிமாற
விருப்பம்' என்று பதில்
சொன்னார்!
'நாகேஷ், தன்னுடைய
திரையுலக
காமெடி வாரிசை உருவாக்காமல்
போய்விட்டார். அந்தத்
தவறை நானும் செய்ய
மாட்டேன்!' அண்மையில்
திரைக்கதைப் பயிற்சிப்
பட்டறை நடத்துவதற்கான
காரணமாக நண்பர்களிடம்
கமல்
பகிர்ந்து கொண்டது இது!
சென்னை புறநகரில்
ஒரு மல்டிப்ளெக்ஸ்
கட்டுவதற்காக கமல்
இடம்வாங்கிப்போட்டிருக்கிறார்.
அனைத்துவிதமான
தொழில் நுட்பங்களுடன்
கூடிய
சினிமா தியேட்டர்களும்,
கேளிக்கை பூங்காக்களும்,
ரெஸ்டாரென்ட்டுகளும்
அங்கு இருக்கும்!
தமிழ்
சினிமாவை 'கோலிவுட்'
என்று பலரும் சொன்னாலும்
கமல் அந்த
வார்த்தையை உச்சரிக்க
மாட்டார். அப்படிச்
சொல்லவேண்டாம் என
மேடைகளிலும்
சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகம்
என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!
வீட்டில்
நான்கு கார்களை வைத்திருக்கும்
கமல்ஹாசன் புதிதாக
ஹம்மர் ஹெச்2 என்னும்
காரை 1.8 கோடி ரூபாய்
விலையில்
வாங்கியிருக்கிறார்.
இது ஸ்டாலின்
வைத்திருக்கும் ஹம்மர்
ஹெச்3 காரைவிட
காஸ்ட்லி!
'உனக்குள்ள
நடமாடிக்கிட்டு இருக்குற
மிருகம்தான் எனக்குள்ள
தூங்கிக்கிட்டு இருக்கு',
'போங்கடா... போய் புள்ள
குட்டிங்களைப் படிக்க
வைங்கடா', 'வீரம்னா என்ன
தெரியுமா..? பயம்
இல்லாதது மாதிரி நடிக்கிறது',
'ஓநாயா இருந்து பார்த்தாதான்
அதோட நியாயம்
என்னான்னு தெரியும்',
'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும்
தெரியுறதில்லை',
'மன்னிக்கிறவன்
மனுஷன்,மன்னிப்புக்
கேட்கிறவன் பெரிய
மனுஷன்' - இவை எல்லாம்
வசனகர்த்தா கமல் எழுதிய
புகழ்பெற்ற வசனங்கள்!
விகடன் டீம்


மறுபடியும் #சுஜாதா

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை.

கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்? -வி.மகேஸ்வரன், காரைக்குடி.

திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை, சென்னை.

உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? -ஆவடி த.தரணிதரன், சென்னை.

சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? -ந.வந்தியக்குமாரன், சென்னை.

இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்‌த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? -ராஜசுதா, சேலம்.

சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? -எஸ்.ஏ.கேசவன், இனாம் மணியாச்சி.

‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? -த.முரளிதரன், சென்னை.

‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.
#நன்றி அம்பலம் மின்னிதழ்...
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

#நன்றி அம்பலம் மின்னிதழ்...

Next PostNewer Posts Previous PostOlder Posts Home