சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்

விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே
வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.


நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.


கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா கனி தான். அதிலும் இவன் ராஜா வேசம் கட்டிய கோமாளி. மகேந்திரா நகர் மெயின் கிரசிங் இல் இருக்கும் வொந்தேர் டிஸ்நீ இல் வாயிற் சிலை வேலை திம்மனுக்கு. எது நடந்தாலும் ஜடமென நிக்க வேண்டிய வேலை . ஒரு விதத்தில் கடவுளுக்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் எது நடந்தாலும் தள்ளி நின்றபடி வேடிக்கை பார்க்கும் பணியல்லவா?.

வெயிலுக்கும் மழைக்கும் அப்பாற்பட்டவன் திம்மன், இக்கால மனித குரங்குகளின் அத்தனை அவமதிப்பையும் சகஜமாய் பார்ப்பவன் ஏற்பவன். அவனை பொறுத்தவரையில் அனைத்தும் வேடிக்கை தான் . வேடிக்கை பார்ப்பவற்க்கே தெரியும் அத்துணை நிகழ்வும் அதன் பின்னொட்டமும்.

அது சரி, எதுக்காக நாளை முதல் பட்டினி ; என்ன காரணம்? . வேறென்ன வேசம் கட்டிய வேலை இன்றோடு அற்று போனது, எத்தனை துயரம் தினமும் வெட்கதிலும் துக்கத்திலும் தூக்கத்தை தொலைத்தான் திம்மன் என்பது அவன் பாதியாம் மனைவி கூட அறிதல் நியாயமில்லை .

அத்தனை அவலங்களும் இன்றோடு இலைமேல் விழுந்த பனித்துளி நழுவுதல் போல விலகிய நிலைகண்டு இதயத்தில் இன்பம் ஊற அதை அப்படியே இழுத்து போட்டு வயிற்றின் கானல் சுட்டு சம்பலாக்கி ஜீரணித தருணம் . மடியில் வந்து விழுந்தான் மகன் அன்புடன் அவனை ஆர தழுவி க்கொண்டே அருகிருக்கும் மனைவியிடம் நாளை முதல் வேலை இல்லை என்ற நிஜத்தை நிதானமாய் உதிர்த்தான் திம்மன்.

உலக ஜீவித்ரேயீல் , தானும் ஒரு பயணி என்ற தத்துவம் புரிந்தவன் திம்மன். என்ன தனது பெட்டி சமூகத்தில் உள்ள பயணிகளின் செயல்களை கடவோரம் நின்று வேடிக்கை பார்க்கும் பயணி.

அதெல்லாம் போகட்டும் எதற்காக வேலை போனது ,திம்மனுக்கு. நிதர்சனம் இல்லா இவ்வுலக தினசரியில் மனிதநேயத்தை பசையிட்டு சேர்த்த காரணத்துக்கு வேலை போனது. இந்த மிருக பிரதேசத்தில் புனிதமான மனிதாபிமானத்தை ஜீவித்த தர்மத்திற்காக வேலை போனது.

உண்மையில் திம்மணிடமும் தவறில்லை வேலை போனதும் தவறில்லை கடமை தவறியதால் வேலை போனது, அது தொழில் தர்மம் .திம்மன் கடமை தவறியதற்கு காரணம் மனித தர்மமே. சிலைக்கே உதாரணமாய் நின்றவனின் மனதில் யுகயுகமாய் வழியின்றி திரிந்த பொது நேசம் திடீரென பேய் பிடித்து போல் கனன்றதின் விளைவு அது.

தெளிவாய் தெரிந்து கொள்ள இன்னும் 8 மணி நேரம் முன்னே திரும்பி செல்ல வேண்டும். காலை 11 மணி இன்றைய சிலையாக நின்றிருந்த திம்மன்., வரவேற்பின் தர்மமும் மறந்து கல் ஆனான் .முதலில் வந்த ப்ரென்ச் குடும்பம் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னே வந்த கல்பாறை ட்‌சர்ட் காரன் டீஜே ஜ்யாஸ் என்றெல்லாம் கை ஆட்டி ஆடினான் யார் கோமாளி என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல திம்மனுக்கும் தான்.

இன்னொரு காதல் ஜோடி; திம்மனுக்கு ஜீவனும் கண்ணும் இருப்பது அறியாது சரசம் செய்து கொண்டனர். அடுத்து ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் ஒரு 15 வயது இளைஞன் வேறொரு குடும்பம் அதனுடன் ஒரு 14 வயது இளம் பெண் . தான் பவுஸை காட்ட பாக்ஸிங் மூட்டையை குத்துவது போல் திம்மன் வயிற்றை படம் பார்த்தான். இத்தனைக்கும் மசியாவில்லை.

அனைவருக்கும் ஆச்சர்யம் சிலர்க்கு பொறாமையும் எரிச்சலும் கூட. பின்ன ஒருவன் புகழப்பட்டால் எத்தனை  பேரால் ஏற்க முடியும். அந்த சிலர் திம்மனை இம்மியெனும் அசைத்திட பல்வேறு வழிகளில் போராடின் .ஏதும் பயனில்லை . தடியடி , கொட்டுதல் போன்ற கொடுமைகள் பொங்கல் போட்டிகள் போல விமார்சையாய் நடந்தெறின. நிஜமாகவே, உணர்ச்சிகளை கழட்டி போட்டவன் போல திம்மன் நகம் கூட நடுங்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்த காகம் சிலை என்றே நம்பி தான் பங்கிற்கு எச்சமிட்டு பறந்தது , பெரும் தலைவர்களுக்கு கிடைக்கும் பெரும் மரியாதையென அதையும் ஏற்றான்.

இத்தனைக்கும் பொருத்த திம்மனுக்கு அதற்கும் மேலாய் ஒன்று நிகழ்ந்தது. கண்ணெதிரே பச்சிளம் குழந்தை மரணிக்க போகும் கொடூரம். முன் நடந்த விபத்தின் பின் விபத்தாய் நிகழ போகும் பயங்கரம். ஸ்கூடி என்னும் சுடிதார் வாகனம் தாய்மையை தாங்கி செல்ல குழந்தையை மடியில் வைத்து கொண்டு. என்ன நடந்திடும் என்ற கர்வமுடன் ஓட்டி செல்லும் பெண். எதிர்வந்த வாகனத்தை மறந்தே போனாள் . காரணம் இரண்டுதான் ஒன்று காதல் நினைவு. இரண்டு தலைக்கணம் .அதில் அவளுக்கான காரணம் இரண்டாவது . மோதியததில் தாய் சாலையோர மரத்தில் மோதி மயங்கினாள் . குழந்தையோ நாடு சாலையில் கிடக்கிறது, பிரதான சாலையின் அத்தனை குணமும் கொண்ட சாலை அது. ஆபத்தில் கடவுள் வருவார் என்பதெல்லாம் என் போன்ற கற்பனையாளர்களின் மூடகருத்து . உண்மையில், கடவுளே திம்மனுக்கு பதில் நின்றிருந்தாலும் தர்மம் பேசி தள்ளியே நிர்ப்பார். காரணம் அவர் வார்த்த சமூகமும் அப்படிபட்டதே . ஆயினும் திம்மன் ஓடினான் குழந்தைக்காக குழந்தை காக்க , குழந்தை காப்பாற்ற பட்டது அவனது வேலை பறிக்க பட்டபோது.

திம்மன் பொருப்பில்லாதவன் , பொறுமையில்லாதவன் என்பதெல்லாம் வேலையற்ற சமூகத்தின் தலைவர்களாகிய குறை கூறும் ஆசாமிகளின் ஒருமித்த கருத்து . நிஜத்தில் அவனே மனிதன். நெருங்கும் மரணமும் அவன் அன்பை கண்டு அடங்கி ஒதுங்கியது.

அத்தனையும் கேட்ட மனைவிக்கு கர்வம் தான் மிச்சம் . அவள் பதிலோ வேறுவிதம் ஒருவேளை இந்நிலை நம் பிள்ளைக்கு என்றால் விட்டு வேடிக்கை பார்ப்பீர்களா அதுபோல் தானே. வேலை போனால் என்ன இன்னொரு வேலை இல்லையா? . அதுவரைக்கும் தானே இந்த பசி பட்டினி எல்லாம் பரவால்ல நாம் சமாளிக்கலாம். திம்மனுக்கும் கண்ணீர் வந்தது . அவன் தியாகம் பெரிதல்ல அவள் தியாகம் முன் என்றதை கண்ணீர் சொன்னது.

நன்றி~


Next PostNewer Posts Previous PostOlder Posts Home